எசேக்கியா மனாசேயைப் பெற்றான்; மனாசே ஆமோனைப் பெற்றான்; ஆமோன் யோசியாவைப் பெற்றான்; பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப்போகுங்காலத்தில், யோசியா எகொனியாவையும் அவனுடைய சகோதரரையும் பெற்றான். பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப்போனபின்பு எகொனியா சலாத்தியேலைப் பெற்றான்; சலாத்தியேல் சொரொபாபேலைப் பெற்றான்; சொரொபாபேல் அபியூதைப் பெற்றான்; அபியூத் எலியாக்கீமைப் பெற்றான்; எலியாக்கீம் ஆசோரைப் பெற்றான்; ஆசோர் சாதோக்கைப் பெற்றான்; சாதோக்கு ஆகீமைப் பெற்றான்; ஆகீம் எலியூதைப் பெற்றான்; எலியூத் எலெயாசாரைப் பெற்றான்; எலெயாசார் மாத்தானைப் பெற்றான்; மாத்தான் யாக்கோபைப் பெற்றான்; யாக்கோபு மரியாளுடைய புருஷனாகிய யோசேப்பைப் பெற்றான்; அவளிடத்தில் கிறிஸ்து என்னப்படுகிற இயேசு பிறந்தார். இவ்விதமாய் உண்டான தலைமுறைகளெல்லாம் ஆபிரகாம்முதல் தாவீதுவரைக்கும் பதினாலு தலைமுறைகளும்; தாவீதுமுதல் பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப்போன காலம்வரைக்கும் பதினாலு தலைமுறைகளும்; பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப்போன காலமுதல் கிறிஸ்துவரைக்கும் பதினாலு தலைமுறைகளுமாம். இயேசு கிறிஸ்துவினுடைய ஜனனத்தின் விவரமாவது: அவருடைய தாயாகிய மரியாள் யோசேப்புக்கு நியமிக்கப்பட்டிருக்கையில், அவர்கள் கூடிவருமுன்னே, அவள் பரிசுத்த ஆவியினாலே கர்ப்பவதியானாள் என்று காணப்பட்டது. அவள் புருஷனாகிய யோசேப்பு நீதிமானாயிருந்து, அவளை அவமானப்படுத்த மனதில்லாமல், இரகசியமாய் அவளைத் தள்ளிவிட யோசனையாயிருந்தான். அவன் இப்படிச் சிந்தித்துக்கொண்டிருக்கையில், கர்த்தருடைய தூதன் சொப்பனத்தில் அவனுக்குக் காணப்பட்டு: தாவீதின் குமாரனாகிய யோசேப்பே, உன் மனைவியாகிய மரியாளைச் சேர்த்துக்கொள்ள ஐயப்படாதே; அவளிடத்தில் உற்பத்தியாயிருக்கிறது பரிசுத்த ஆவியினால் உண்டானது. அவள் ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக; ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான். தீர்க்கதரிசியின் மூலமாய்க் கர்த்தராலே உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இதெல்லாம் நடந்தது. அவன்: இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள்; அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள் என்று சொன்னான். இம்மானுவேல் என்பதற்கு தேவன் நம்மோடிருக்கிறார் என்று அர்த்தமாம்.
வாசிக்கவும் மத்தேயு 1
கேளுங்கள் மத்தேயு 1
பகிர்
அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக: மத்தேயு 1:10-23
5 Days
In all the holiday hustle and bustle, it can be easy to lose sight of why we’re celebrating. In this 5-day advent plan, we’ll dive into the promises fulfilled by the birth of Jesus and the hope we have for the future. As we learn more about who God is, we’ll discover how to live through the holiday season with hope, faith, joy, and peace.
5 நாட்கள்
கடவுளின் மகிமையைப் பற்றி நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அது அதிகப் பழக்கமான ஒன்று ஆகையால் அதை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. இந்த கிறிஸ்மஸ் காலத்தில் அதிகம் பழகிப்போன, ஆனால் மிகவும் முக்கியமான இந்த உண்மையை நீங்கள் மறுபடியும் கவனித்து அது உங்களது கண்ணோட்டங்களை மாற்றும் என்று நம்புகிறோம்.
7 நாட்களில்
ஆண்டவர் ஏன் வாக்குத்தத்தங்களைக் கொடுக்கிறார் தெரியுமா? ஆண்டவர் தமது வாக்குத்தத்தங்களை நிறைவேற்றுவதில் உண்மையுள்ளவர். நீ அவருடைய வாக்குத்தத்தங்களுக்குள் பிரவேசிக்க விரும்புகிறாயா? ஆண்டவருடைய மிகச்சிறந்த வாக்குத்தத்தம் என்ன? வாக்குத்தத்தம் உனக்கு அளிக்கப்படும்போது நீ எப்படி நடந்துகொள்ளுவாய்? வாக்குத்தத்தத்திற்கு காலாவதி தேதி ஏதேனும் உண்டா? இன்று உனக்கு என்ன வாக்குத்தத்தம் தேவை? இவைகளை பற்றிய விஷயங்களை இந்த திட்டத்தில் காணலாம்.
19 Days
This three week plan walks us through the timeless wonder of how God came to us through His son, Jesus. The plan is designed to begin on a Monday so that each weekend will include shorter content meant for rest and reflection during the holiday season. Join us as we study what the birth of Christ means for our future, present, and past.
வசனங்களைச் சேமிக்க, ஆஃப்லைனில் படிக்க, கற்பித்தல் கிளிப்களைப் பார்க்க மற்றும் பல!
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்