அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: தீர்க்கதரிசிகள் சொன்ன யாவையும் விசுவாசிக்கிறதற்குப் புத்தியில்லாத மந்த இருதயமுள்ளவர்களே, கிறிஸ்து இவ்விதமாகப் பாடுபடவும், தமது மகிமையில் பிரவேசிக்கவும் வேண்டியதில்லையா என்று சொல்லி, மோசே முதலிய சகல தீர்க்கதரிசிகளும் எழுதின வேதவாக்கியங்களெல்லாவற்றிலும் தம்மைக்குறித்துச் சொல்லியவைகளை அவர்களுக்கு விவரித்துக் காண்பித்தார். அத்தருணத்தில் தாங்கள் போகிற கிராமத்துக்குச் சமீபமானார்கள். அப்பொழுது அவர் அப்புறம் போகிறவர்போலக் காண்பித்தார். அவர்கள் அவரை நோக்கி: நீர் எங்களுடனே தங்கியிரும், சாயங்காலமாயிற்று, பொழுதும் போயிற்று, என்று அவரை வருந்திக் கேட்டுக்கொண்டார்கள். அப்பொழுது அவர் அவர்களுடனே தங்கும்படி உள்ளே போனார். அவர்களோடே அவர் பந்தியிருக்கையில், அவர் அப்பத்தை எடுத்து, ஆசீர்வதித்து, அதைப்பிட்டு, அவர்களுக்குக் கொடுத்தார். அப்பொழுது அவர்களுடைய கண்கள் திறக்கப்பட்டு, அவரை அறிந்தார்கள். உடனே அவர் அவர்களுக்கு மறைந்துபோனார். அப்பொழுது அவர்கள் ஒருவரையொருவர் நோக்கி: வழியிலே அவர் நம்முடனே பேசி, வேதவாக்கியங்களை நமக்கு விளங்கக்காட்டினபொழுது, நம்முடைய இருதயம் நமக்குள்ளே கொழுந்துவிட்டு எரியவில்லையா என்று சொல்லிக்கொண்டு, அந்நேரமே எழுந்திருந்து, எருசலேமுக்குத் திரும்பிப்போய், பதினொருவரும் அவர்களோடிருந்தவர்களும் கூடியிருக்கக்கண்டு
வாசிக்கவும் லூக்கா 24
கேளுங்கள் லூக்கா 24
பகிர்
அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக: லூக்கா 24:25-33
6 நாட்களில்
சிறிய பயணங்களில் "பைபிள் மூலம்" பயணம் செய்யுங்கள், அதே சமயம் கடவுளுடைய வார்த்தையைக் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள், இங்கே வழிகாட்டுதல்களுடன் தொடங்குங்கள். சிறிய பயணங்களில் "பைபிள் மூலம்" பயணம் செய்யுங்கள், அதே சமயம் கடவுளுடைய வார்த்தையைக் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள், இங்கே வழிகாட்டுதல்களுடன் தொடங்குங்கள்.
29 நாட்கள்
இயேசுவின் பிறப்பு முதல் இறப்பு வரை உயிர்த்தெழுதல் வரை லூக்கா சொல்லும் நற்செய்தியை நேரில் கண்ட சாட்சிகள் தெரிவிக்கின்றனர்; உலகை மாற்றிய தனது போதனைகளையும் லூக்கா மீண்டும் கூறுகிறார். நீங்கள் ஆடியோ படிப்பைக் கேட்கும்போதும் கடவுளுடைய வார்த்தையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட வசனங்களைப் படிக்கும்போதும் லூக்கா வழியாக தினசரி பயணம் செய்யுங்கள்.
30 நாட்களில்
இயேசு இந்த உலகத்தில் இருந்தபோது நம்புவதற்கரிய பல காரியங்களை மக்களுக்குச் செய்தார். இந்த வேதத் திட்டத்தை வாசிக்கும் நீங்கள் தனிப்பட்ட விதத்தில் இயேசுவை முழுமையாக அனுபவித்து உணருவீர்கள் என்று நம்புகிறோம். அதேசமயம், நாம் இந்த உலகத்தில் இயற்கைக்கு அப்பாற்பட்ட காரியங்களைக் காண விரும்பி, தேவன் மீதுள்ள விசுவாசத்தை விட்டுவிடவும் கூடாது.
வசனங்களைச் சேமிக்க, ஆஃப்லைனில் படிக்க, கற்பித்தல் கிளிப்களைப் பார்க்க மற்றும் பல!
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்