லூக்கா 23:36-46

லூக்கா 23:36-46 TAOVBSI

போர்ச்சேவகரும் அவரிடத்தில் சேர்ந்து, அவருக்குக் காடியைக் கொடுத்து: நீ யூதரின் ராஜாவானால், உன்னை இரட்சித்துக்கொள் என்று அவரைப் பரியாசம்பண்ணினார்கள். இவன் யூதருடைய ராஜா என்று, கிரேக்கு, லத்தீன், எபிரெயு எழுத்துக்களில் எழுதி, அவருக்கு மேலாக வைக்கப்பட்டது. அன்றியும் சிலுவையில் அறையப்பட்டிருந்த குற்றவாளிகளில் ஒருவன்: நீ கிறிஸ்துவானால் உன்னையும் எங்களையும் இரட்சித்துக்கொள் என்று அவரை இகழ்ந்தான். மற்றவன் அவனை நோக்கி: நீ இந்த ஆக்கினைக்குட்பட்டவனாயிருந்தும் தேவனுக்குப் பயப்படுகிறதில்லையா? நாமோ நியாயப்படி தண்டிக்கப்படுகிறோம்; நாம் நடப்பித்தவைகளுக்குத் தக்க பலனை அடைகிறோம்; இவரோ தகாததொன்றையும் நடப்பிக்கவில்லையே என்று அவனைக் கடிந்துகொண்டு, இயேசுவை நோக்கி: ஆண்டவரே, நீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும் என்றான். இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு நீ என்னுடேனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார். அப்பொழுது ஏறக்குறைய ஆறாம்மணி நேரமாயிருந்தது; ஒன்பதாம்மணி நேரம்வரைக்கும் பூமியெங்கும் அந்தகாரமுண்டாயிற்று. சூரியன் இருளடைந்தது, தேவாலயத்தின் திரைச்சீலை நடுவில் இரண்டாகக் கிழிந்தது. இயேசு: பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் என்று மகா சத்தமாய்க் கூப்பிட்டுச் சொன்னார்; இப்படிச் சொல்லி, ஜீவனை விட்டார்.

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த லூக்கா 23:36-46

கிறிஸ்துமஸ் இதயத்தில் உள்ளது - 7 நாள் வீடியோ திட்டம் லூக்கா 23:36-46 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

கிறிஸ்துமஸ் இதயத்தில் உள்ளது - 7 நாள் வீடியோ திட்டம்

7 நாட்களில்

கிறிஸ்துமஸ் இதயத்தில் உள்ளது" என்ற எங்கள் டிஜிட்டல் பிரச்சாரத்தின் மூலம் நீங்கள் கிறிஸ்மஸின் உண்மையான உணர்வை அனுபவிக்க முடியும். இந்த சிறப்பு நிகழ்ச்சி லுமோ கிறிஸ்துமஸ் திரைப்படத்தின் எழுச்சியூட்டும் காட்சிகள் மூலம் இயேசுவின் கதையை ஆராய்கிறது. தனிப்பட்ட சிந்தனை, அர்த்தமுள்ள உரையாடல்கள் மற்றும் சமூக ஈடுபாடு ஆகியவற்றை ஊக்குவிக்கிறது. பல மொழிகளில் வழங்கப்படும், இது கிறிஸ்துமஸ் சீசன் முழுவதும் இந்த மகிழ்ச்சியான அனுபவத்தை பகிர்ந்து கொள்ள அனைத்து பின்னணியிலும் உள்ள மக்களை ஒன்றிணைக்கிறது.

கிறிஸ்துமஸ் இதயத்தில் உள்ளது - 14 நாள் வீடியோ திட்டம் லூக்கா 23:36-46 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

கிறிஸ்துமஸ் இதயத்தில் உள்ளது - 14 நாள் வீடியோ திட்டம்

14 நாட்களில்