ஒரு வீட்டில் பிரவேசிக்கிறபோது: இந்த வீட்டுக்குச் சமாதானம் உண்டாவதாகவென்று முதலாவது சொல்லுங்கள். சமாதான பாத்திரன் அங்கே இருந்தால், நீங்கள் கூறின சமாதானம் அவனிடத்தில் தங்கும், இல்லாதிருந்தால் அது உங்களிடத்திற்குத் திரும்பிவரும். அந்த வீட்டிலேதானே நீங்கள் தங்கியிருந்து, அவர்கள் கொடுக்கிறவைகளைப் புசித்துக் குடியுங்கள்; வேலையாள் தன் கூலிக்குப் பாத்திரனாயிருக்கிறான். வீட்டுக்கு வீடு போகாதிருங்கள். ஒரு பட்டணத்தில் நீங்கள் பிரவேசிக்கிறபொழுது, ஜனங்கள் உங்களை ஏற்றுக்கொண்டால் அவர்கள் உங்கள்முன்வைக்கிறவைகளை நீங்கள் புசித்து, அவ்விடத்திலுள்ள பிணியாளிகளைச் சொஸ்தமாக்கி: தேவனுடைய ராஜ்யம் உங்களுக்குச் சமீபமாய் வந்திருக்கிறது என்று அவர்களுக்குச் சொல்லுங்கள். யாதொரு பட்டணத்தில் நீங்கள் பிரவேசிக்கிறபொழுது, ஜனங்கள் உங்களை ஏற்றுக்கொள்ளாவிட்டால் அதின் வீதிகளிலே நீங்கள் போய்: எங்களில் ஒட்டின உங்கள் பட்டணத்தின் தூசியையும் உங்களுக்கு விரோதமாய்த் துடைத்துப்போடுகிறோம்; ஆயினும் தேவனுடைய ராஜ்யம் உங்களுக்குச் சமீபமாய் வந்திருக்கிறதென்பதை அறிந்துகொள்வீர்களாக என்று சொல்லுங்கள்.
வாசிக்கவும் லூக்கா 10
கேளுங்கள் லூக்கா 10
பகிர்
அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக: லூக்கா 10:5-11
7 நாட்கள்
சில சமயங்களில், நாம் இனி ஒருபோதும் சமாதானத்துடன் வாழ முடியாதபடிக்கு, இந்த உலகத்தின் சத்தங்களால் மிகவும் நெருக்கப்படுகிறோம். நம் சமூகத்தின் சலசலப்பு மற்றும் சந்தடியால் மூழ்கடிக்கப்பட்டிருக்கிறோம். கண்ணுக்குத் தெரியாத எதிரியை எதிர்த்துப் போராடுவது போல் இருக்கிறது... இந்தக் கடினமான காலங்களில், இயேசு நம்மிடம் பேசி, "அமைதி, நான் இங்கே இருக்கிறேன், கவலைப்பட வேண்டாம்" என்று சொல்கிறார். இந்த திட்டத்தின் வழியாய் ஆண்டவர் உங்களிடம் பேசி அவருடைய பரிபூரண ஷாலோமை நீங்கள் பெற்றுக்கொள்ளும்படி உங்களை ஆசீர்வதிப்பாராக!
கோபம் என்பது உனக்குள் இருக்கும் மிகவும் வலிமையான ஒரு உணர்ச்சி, அதை உன் வாழ்வில் அனுமதித்தால், அது நம்மை குருடாகவும் செவிடாகவும் மாற்றிவிடும். சில நேரங்களில் ஏன் கோபப்படுகிறாய் என்று தெரியாமலேயே நீ கோபப்படுகிறாய். மறைந்திருக்கும் இந்தக் கோபம் எங்கிருந்து வருகிறது? கோபம் ஒரு திருடன். உனது சமாதானத்தையும் சந்தோஷத்தையும் நேரத்தையும் அவன் திருடிவிடுவான். உன் வாழ்விற்கு விஷமாக மாறும் இந்தத் தீங்கிலிருந்து உன்னை விடுவித்துக்கொள்வது எப்படி என்பதையும் கோபத்தை மேற்கொண்டு நம் அன்றாட வாழ்க்கையில் சமாதானத்தை பெற்றுக்கொள்வது எப்படி என்பதை வேத வசனங்களின் வெளிச்சத்தில் நாம் தியானிக்கலாம்.
29 நாட்கள்
இயேசுவின் பிறப்பு முதல் இறப்பு வரை உயிர்த்தெழுதல் வரை லூக்கா சொல்லும் நற்செய்தியை நேரில் கண்ட சாட்சிகள் தெரிவிக்கின்றனர்; உலகை மாற்றிய தனது போதனைகளையும் லூக்கா மீண்டும் கூறுகிறார். நீங்கள் ஆடியோ படிப்பைக் கேட்கும்போதும் கடவுளுடைய வார்த்தையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட வசனங்களைப் படிக்கும்போதும் லூக்கா வழியாக தினசரி பயணம் செய்யுங்கள்.
வசனங்களைச் சேமிக்க, ஆஃப்லைனில் படிக்க, கற்பித்தல் கிளிப்களைப் பார்க்க மற்றும் பல!
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்