அதினால் அவர்களைச்சுற்றி வாசமாயிருந்த யாவருக்கும் பயமுண்டாயிற்று. மேலும் யூதேயாவின் மலைநாடெங்கும் இந்த வர்த்தமானங்களெல்லாம் சொல்லிக்கொள்ளப்பட்டது. அவைகளைக் கேள்விப்பட்டவர்களெல்லாரும் தங்கள் மனதிலே அவைகளை வைத்துக்கொண்டு, இந்தப் பிள்ளை எப்படிப்பட்டதாயிருக்குமோ என்றார்கள். கர்த்தருடைய கரம் அந்தப் பிள்ளையோடே இருந்தது. அவனுடைய தகப்பனாகிய சகரியா பரிசுத்த ஆவியினாலே நிரப்பப்பட்டு, தீர்க்கதரிசனமாக: இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக. அவர் நம்முடைய பிதாக்களுக்கு வாக்குத்தத்தம்பண்ணின இரக்கத்தைச் செய்வதற்கும்; தம்முடைய பரிசுத்த உடன்படிக்கையை நினைத்தருளி: உங்கள் சத்துருக்களின் கைகளினின்று நீங்கள் விடுதலையாக்கப்பட்டு, உயிரோடிருக்கும் நாளெல்லாம் பயமில்லாமல் எனக்கு முன்பாகப் பரிசுத்தத்தோடும் நீதியோடும் எனக்கு ஊழியஞ்செய்யக் கட்டளையிடுவேன் என்று, அவர் நம்முடைய பிதாவாகிய ஆபிரகாமுக்கு இட்ட ஆணையை நிறைவேற்றுவதற்கும்; ஆதிமுதற்கொண்டிருந்த தம்முடைய பரிசுத்த தீர்க்கதரிசிகளின் வாக்கினால் தாம் சொன்னபடியே, தமது ஜனத்தைச் சந்தித்து மீட்டுக்கொண்டு, நம்முடைய சத்துருக்களினின்றும், நம்மைப் பகைக்கிற யாவருடைய கைகளினின்றும், நம்மை இரட்சிக்கும்படிக்கு, தம்முடைய தாசனாகிய தாவீதின்வம்சத்திலே நமக்கு இரட்சணியக்கொம்பை ஏற்படுத்தினார். நீயோ பாலகனே, உன்னதமானவருடைய தீர்க்கதரிசி என்னப்படுவாய்; நீ கர்த்தருக்கு வழிகளை ஆயத்தம்பண்ணவும், நமது தேவனுடைய உருக்கமான இரக்கத்தினாலே அவருடைய ஜனத்துக்குப் பாவமன்னிப்பாகிய இரட்சிப்பைத் தெரியப்படுத்தவும், அவருக்கு முன்னாக நடந்துபோவாய். அந்தகாரத்திலும் மரண இருளிலும் உட்கார்ந்திருக்கிறவர்களுக்கு வெளிச்சம் தரவும், நம்முடைய கால்களைச் சமாதானத்தின் வழியிலே நடத்தவும், அவ்விரக்கத்தினாலே உன்னதத்திலிருந்து தோன்றிய அருணோதயம் நம்மைச் சந்தித்திருக்கிறது என்றான். அந்தப் பிள்ளை வளர்ந்து, ஆவியிலே பலங்கொண்டு, இஸ்ரவேலுக்குத் தன்னைக் காண்பிக்கும் நாள்வரைக்கும் வனாந்தரங்களிலே இருந்தான்.
வாசிக்கவும் லூக்கா 1
கேளுங்கள் லூக்கா 1
பகிர்
அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக: லூக்கா 1:65-80
5 நாட்களில்
உலகின் ஒளியாகிய இயேசு, நம் மத்தியில் வசிப்பதற்க்காக, நம்மைப்போல மனிதனாக அவதரித்த அந்த தருணம் தான் இவ்வுலகத்தின் மிக மிக முக்கியமான தருணம் ஆகும். அவரின் வருகையை தேவதூதர்கள் அறிவித்தனர், கவிதைகள் எழுதப்பட்டன, மேய்ப்பர்கள் அவரைக்காண விரைந்தனர், மரியாள் பாடினாள்! அவரின் ஒளி எப்படி அவரோடிருந்தவர்களுக்கு ஊக்கம் கொடுத்தது என்பதையும், மற்றும் இன்று நமக்கு எவ்வகையில் ஊக்கம் கொடுக்கிறது என்பதனை அனுபவித்து அறியும்படி, இந்த ஐந்து நாட்கள் பயணத்தில் எங்களோடு இணைந்துகொள்ளுங்கள்
7 Days
Christmas is supposed to be a season of joy –– but what exactly is joy and how do you choose it when the world is filled with hurt and hardship? Discover what “joy to the world” really means by immersing yourself in the Christmas story with this special, 7-day Christmas Plan.
7 நாட்கள்
லூக்கா எழுதின சுவிசேஷமானது ஒரு படம் எடுப்பதற்கேற்ப அழகாக வடிவமைக்கப்பெற்று சித்தரிக்கப்பட்டுள்ளது மற்றும் அது உன்னை இயேசுவுடன் சேர்ந்து பயணிக்க வழிநடத்துகிறது. கிறிஸ்துமஸ் காலத்துக்கு ஆயத்தமாகும் பயணத்தில் தொடங்கி, அவரது வாழ்க்கையின் அனைத்து ஏற்றத் தாழ்வுகளையும் உணர்ந்து பார்ப்போம். இதை எழுதிய ஆசிரியர் லூக்காவின் பார்வையில் அதைப் பார்க்கும்போது, நாமும் கதையை உற்சாகமாய் ரசிக்க இயலும்.
7 நாட்களில்
கிறிஸ்துமஸ் இதயத்தில் உள்ளது" என்ற எங்கள் டிஜிட்டல் பிரச்சாரத்தின் மூலம் நீங்கள் கிறிஸ்மஸின் உண்மையான உணர்வை அனுபவிக்க முடியும். இந்த சிறப்பு நிகழ்ச்சி லுமோ கிறிஸ்துமஸ் திரைப்படத்தின் எழுச்சியூட்டும் காட்சிகள் மூலம் இயேசுவின் கதையை ஆராய்கிறது. தனிப்பட்ட சிந்தனை, அர்த்தமுள்ள உரையாடல்கள் மற்றும் சமூக ஈடுபாடு ஆகியவற்றை ஊக்குவிக்கிறது. பல மொழிகளில் வழங்கப்படும், இது கிறிஸ்துமஸ் சீசன் முழுவதும் இந்த மகிழ்ச்சியான அனுபவத்தை பகிர்ந்து கொள்ள அனைத்து பின்னணியிலும் உள்ள மக்களை ஒன்றிணைக்கிறது.
வசனங்களைச் சேமிக்க, ஆஃப்லைனில் படிக்க, கற்பித்தல் கிளிப்களைப் பார்க்க மற்றும் பல!
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்