புலம்பல் 3:1-20

புலம்பல் 3:1-20 TAOVBSI

ஆண்டவருடைய சினத்தின் மிலாற்றினால் உண்டான சிறுமையைக் கண்ட புருஷன் நான். அவர் என்னை வெளிச்சத்திலே அல்ல, இருளிலே அழைத்து நடத்திவந்தார். அவர் தமது கையை எனக்கு விரோதமாகவே நித்தமும் திருப்பினார். என் சதையையும், என் தோலையும் முற்றலாக்கினார்; என் எலும்புகளை நொறுக்கினார். அவர் எனக்கு விரோதமாகக் கொத்தளங்கட்டி, கசப்பினாலும் வருத்தத்தினாலும் என்னை வளைந்துகொண்டார். பூர்வகாலத்தில் செத்துக்கிடக்கிறவர்களைப்போல என்னை இருளான இடங்களில் கிடக்கப்பண்ணினார். நான் புறப்படக்கூடாதபடி என்னைச்சூழ வேலியடைத்தார்; என் விலங்கைப் பாரமாக்கினார். நான் சத்தமிட்டுக் கூப்பிட்டாலும், என் ஜெபத்துக்கு வழியை அடைத்துப்போட்டார். வெட்டின கற்களின் சுவரால் என் வழிகளை அடைத்துப்போட்டார், என் பாதைகளைத் தாறுமாறாக்கினார். அவர் எனக்குப் பதிவிருக்கிற கரடியும், மறைவிடங்களில் தங்குகிற சிங்கமுமாயிருக்கிறார் என் வழிகளை அப்புறப்படுத்தி, என்னைத் துண்டித்துப்போட்டார்; என்னைப்பாழாக்கிவிட்டார். தமது வில்லை நாணேற்றி, என்னை அம்புக்கு இலக்காக வைத்தார். தம்முடைய அம்பறாத்தூணியின் அம்புகளை என் உள்ளிந்திரியங்களில் படப்பண்ணினார். நான் என் ஜனத்தார் யாவருக்கும் பரியாசமும், நித்தம் அவர்கள் கின்னரப்பாடலுமானேன். கசப்பினால் என்னை நிரப்பி, எட்டியினால் என்னை வெறிக்கச்செய்தார். அவர் பருக்கைக்கற்களால் என் பற்களை நொறுக்கி, என்னைச் சாம்பலில் புரளப்பண்ணினார். என் ஆத்துமாவைச் சமாதானத்துக்குத் தூரமாக்கினார்; சுகத்தை மறந்தேன். என் பெலனும் நான் கர்த்தருக்குக் காத்திருந்த நம்பிக்கையும் அழிந்துபோயிற்று என்றேன். எட்டியும் பிச்சுமாகிய என் சிறுமையையும் என் தவிப்பையும் நினைத்தருளும். என் ஆத்துமா அவைகளை நினைத்து நினைத்து எனக்குள் முறிந்துபோகிறது.

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த புலம்பல் 3:1-20

ஜர்னலிங் புலம்பல் 3:1-20 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

ஜர்னலிங்

5 நாட்களில்

ஜர்னலிங் என்பது .உங்கள் எண்ணங்களையும் உணர்வுகளையும் இன்னும் தெளிவாகப் புரிந்துகொள்ள அவற்றை எழுதுவது ஆகும்.நாம் மன அழுத்தம், மனச்சோர்வு அல்லது பதட்டத்துடன் போராடினால், ஒரு ஜர்னல் அல்லது ஒரு குறிப்பேடு வைத்திருப்பது ஒரு சிறந்த யோசனையாக இருக்கும். ‭பிலிப்பியர் 4:6-7 [6] நீங்கள் ஒன்றுக்குங்கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். [7] அப்பொழுது, எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்.இது நம் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தவும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும்.