யோசுவா 15:20-63

யோசுவா 15:20-63 TAOVBSI

யூதா புத்திரருக்கு அவர்களுடைய வம்சங்களின்படி உண்டான சுதந்தரம் என்னவென்றால்: கடையாந்தரத் தென்புறமான ஏதோமின் எல்லைக்கு நேராய், யூதா புத்திரரின் கோத்திரத்திற்குக் கிடைத்த பட்டணங்களாவன: கப்செயேல், ஏதேர், யாகூர், கீனா, திமோனா, ஆதாதா, கேதேஸ், ஆத்சோர், இத்னான், சீப், தேலெம், பெயாலோத், ஆத்சோர், அதாத்தா, கீரியோத், எஸ்ரோன் என்னும் ஆத்சோர், ஆமாம், சேமா, மொலாதா, ஆத்சார்காதா, எஸ்மோன், பெத்பாலேத், ஆத்சார்சுவால், பெயர்செபா, பிஸ்யோத்யா, பாலா, ஈயிம், ஆத்சேம், எல்தோலாத், கெசீல், ஒர்மா, சிக்லாக், மத்மன்னா, சன்சன்னா, லெபாயோத், சில்லீம், ஆயின், ரிம்மோன் என்பவைகள்; எல்லாப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களுமுட்பட இருபத்தொன்பது. பள்ளத்தாக்கு நாட்டில் எஸ்தாவோல், சோரியா, அஷ்னா, சனோகா, என்கன்னீம், தப்புவா, ஏனாம், யர்மூத், அதுல்லாம், சோக்கோ, அசேக்கா, சாராயீம், அதித்தாயீம், கெதேரா, கேதெரொத்தாயீம்; இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களுமுட்பட பதினான்கு. சேனான், அதாஷா, மிக்தால்காத், திலியான், மிஸ்பே, யோக்தெயேல், லாகீஸ், போஸ்காத், எக்லோன், காபோன், லகமாம், கித்லீஷ், கெதெரோத், பெத்டாகோன், நாகமா, மக்கேதா; இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களுமுட்படப் பதினாறு. லிப்னா, ஏத்தேர், ஆஷான், இப்தா, அஸ்னா, நெத்சீப், கேகிலா, அக்சீப், மரேஷா; இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களுமுட்பட ஒன்பது. எக்ரோனும் அதின் வெளிநிலங்களும் கிராமங்களும், எக்ரோன் துவக்கிச் சமுத்திரம் மட்டும், அஸ்தோத்தின் புறத்திலிருக்கிற சகல ஊர்களும், அவைகளின் கிராமங்களும், அஸ்தோத்தும், அதின் வெளிநிலங்களும் கிராமங்களும், காசாவும் எகிப்தின் நதிமட்டுமிருக்கிற அதின் வெளிநிலங்களும் கிராமங்களுமே; பெரிய சமுத்திரமே எல்லை. மலைகளில், சாமீர், யாத்தீர், சோக்கோ, தன்னா, தெபீர் என்னப்பட்ட கீரியாத்சன்னா, ஆனாப், எஸ்தெமொ, ஆனீம், கோசேன், ஓலோன், கிலொ; இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களுமுட்படப் பதினொன்று. அராப், தூமா, எஷியான், யானூம், பெத்தப்புவா, ஆப்பெக்கா, உம்தா, எபிரோனாகிய கீரியாத் அர்பா, சீயோர்; இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களுமுட்பட ஒன்பது. மாகோன், கர்மேல், சீப், யுத்தா, யெஸ்ரயேல், யொக்தெயாம், சனோகா, காயின், கிபியா, திம்னா; இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களுமுட்படப் பத்து. அல்கூல், பெத்சூர், கெதோர், மகாராத், பெதானோத், எல்தெகோன்; இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களுமுட்பட ஆறு. கீரியாத்யெயாரீமாகிய கீரியாத்பாகால், ரபா; இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களுமுட்பட இரண்டு. வனாந்தரத்தில், பெத்அரபா, மித்தீன், செக்காக்கா, நிப்சான், உப்புப்பட்டணம், என்கேதி; இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களுமுட்பட ஆறு. எருசலேமிலே குடியிருந்த எபூசியரை யூதா புத்திரர் துரத்திவிடக்கூடாமற்போயிற்று; ஆகையால் இந்நாள்மட்டும் எபூசியர் யூதா புத்திரரோடே எருசலேமிலே குடியிருக்கிறார்கள்.