யோவேல் 2:28-30

யோவேல் 2:28-30 TAOVBSI

அதற்குப் பின்பு நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன்; அப்பொழுது உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் தீர்க்கதரிசனஞ் சொல்லுவார்கள்; உங்கள் மூப்பர் சொப்பனங்களையும், உங்கள் வாலிபர் தரிசனங்களையும் காண்பார்கள். ஊழியக்காரர்மேலும் ஊழியக்காரிகள்மேலும், அந்நாட்களிலே என் ஆவியை ஊற்றுவேன். வானத்திலும் பூமியிலும் இரத்தம் அக்கினி புகைஸ்தம்பங்களாகிய அதிசயங்களைக் காட்டுவேன்.

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த யோவேல் 2:28-30

பரிசுத்த ஆவியின் மூலமாக ஆன்மீக விழிப்புணர்வு யோவேல் 2:28-30 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

பரிசுத்த ஆவியின் மூலமாக ஆன்மீக விழிப்புணர்வு

3 நாட்களில்

பரிசுத்த ஆவியின் மூலமாக நமது சாதாரண எண்ணங்கள் புதுவிதமான மாற்றங்களை பெறுகிறது. முதலாவதாக நம் இதயங்களை பாதுகாக்கிறது மேலும் நமது கனவுகள் மற்றும் தரிசனங்கள் தெய்வீக வழிகாட்டுதலை வெளிப்படுத்துகிறது. ஆவியானவருடன் இணைந்து செயல்பட நம்மை ஒப்படைப்பது மூலம், நம் இயல்பான உணர்வற்ற மனதின் வல்லமையை பயன்படுத்தி, தடைபட்டிருந்த ஆவிக்குரிய வளர்ச்சியை அடைய அதற்கு எதிரான வளர்ச்சித் தடைகளைத் தாண்டி, நம் வாழ்வில் தேவனின் மறுரூபப்படுத்தும் அனுபவங்களை அனுபவிக்க இயலும். இந்த ஆவிக்குரிய அனுபவங்கள் நம்மை நாமே ஆழமாகப் புரிந்துகொள்ளவும், தேவனின் நோக்கங்களை வெளிப்படுத்தவும், நம்பிக்கை, தெளிவு மற்றும் ஆன்மீக வெற்றியுடன் வாழும் உன்னத அதிகாரம் அளிக்கிறது.