யோவான் 21:17-24

யோவான் 21:17-24 TAOVBSI

மூன்றாந்தரம் அவர் அவனை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ என்னை நேசிக்கிறாயா என்றார். என்னை நேசிக்கிறாயா என்று அவர் மூன்றாந்தரம் தன்னைக் கேட்டபடியினாலே, பேதுரு துக்கப்பட்டு: ஆண்டவரே, நீர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறீர், நான் உம்மை நேசிக்கிறேன் என்பதையும் நீர் அறிவீர் என்றான். இயேசு: என் ஆடுகளை மேய்ப்பாயாக என்றார். நீ இளயவதுள்ளவனாயிருந்தபோது உன்னை நீயே அரைகட்டிக்கொண்டு, உனக்கு இஷ்டமான இடங்களிலே நடந்து திரிந்தாய்; நீ முதிர்வயதுள்ளவனாகும்போது உன் கைகளை நீட்டுவாய்; வேறொருவன் உன் அரையைக் கட்டி, உனக்கு இஷ்டமில்லாத இடத்துக்கு உன்னைக் கொண்டுபோவான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார். இன்னவிதமான மரணத்தினாலே அவன் தேவனை மகிமைப்படுத்தப்போகிறானென்பதைக் குறிக்கும்படியாக இப்படிச் சொன்னார். அவர் இதைச் சொல்லியபின்பு, அவனை நோக்கி: என்னைப் பின்பற்றிவா என்றார். பேதுரு திரும்பிப்பார்த்து, இயேசுவுக்கு அன்பாயிருந்தவனும், இராப்போஜனம்பண்ணுகையில் அவர் மார்பிலே சாய்ந்து: ஆண்டவரே, உம்மைக் காட்டிக்கொடுக்கிறவன் யார் என்று கேட்டவனுமாகிய சீஷன் பின்னே வருகிறதைக் கண்டான். அவனைக் கண்டு, பேதுரு இயேசுவை நோக்கி: ஆண்டவரே, இவன் காரியம் என்ன என்றான். அதற்கு இயேசு: நான் வருமளவும் இவனிருக்க எனக்குச் சித்தமானால், உனக்கென்ன, நீ என்னைப் பின்பற்றிவா என்றார். ஆகையால் அந்தச் சீஷன் மரிப்பதில்லையென்கிற பேச்சு சகோதரருக்குள்ளே பரம்பிற்று. ஆனாலும், அவன் மரிப்பதில்லையென்று இயேசு சொல்லாமல், நான் வருமளவும் இவனிருக்க எனக்குச் சித்தமானால் உனக்கென்னவென்று சொன்னார். அந்தச் சீஷனே இவைகளைக் குறித்துச் சாட்சிகொடுத்து இவைகளை எழுதினவன்; அவனுடைய சாட்சி மெய்யென்று அறிந்திருக்கிறோம்.

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த யோவான் 21:17-24

தேவனின் நோக்கத்தையே முன் வைத்து வாழும் ஒரு வாழ்வு யோவான் 21:17-24 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

தேவனின் நோக்கத்தையே முன் வைத்து வாழும் ஒரு வாழ்வு

4 நாட்களில்

தேவனின் நோக்கத்தை முன்பாக வைத்து வாழ விரும்பும் நம் வாழ்வில் நமக்கு நம் நம்பிக்கையை சோதிக்கும், பயத்தை தூண்டி, குற்ற உணர்ச்சியாலும் வருத்தத்தாலும் நம்மைச் சுமையாக்கும் சவால்களை வாழ்க்கை அடிக்கடி கொண்டுவருகிறது. ஆனாலும், நம்முடைய விசுவாசம் என்பது தேவனின் நோக்கமும் கிருபையும் நமக்கு துணையாக நின்று ஜெயிப்பதற்கான பலத்தை நமக்கு அளிக்கிறது. சந்தேகங்களை எதிர்கொள்வதற்கும், அச்சங்களை வெல்வதற்கும், மன்னிப்பை ஏற்றுக்கொள்வதற்கும், வருத்தத்தை அறிக்கை செய்வதற்கும் இந்த வேதாகமப் பாடங்களையும் நடைமுறைப் படிகளையும் ஆராய உங்களை அழைக்கிறது. தேவனின் வாக்குறுதிகளை நம்பி, அவருடைய கிருபையில் நம்பிக்கையுடன் நடக்க, தைரியமாக வாழ இந்தப் பிரதிபலிப்புகள் உங்களைத் தூண்டட்டும்.