யோவான் 14:5-10

யோவான் 14:5-10 TAOVBSI

தோமா அவரை நோக்கி: ஆண்டவரே, நீர் போகிற இடத்தை அறியோமே, வழியை நாங்கள் எப்படி அறிவோம் என்றான். அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான். என்னை அறிந்தீர்களானால் என் பிதாவையும் அறிந்திருப்பீர்கள்; இதுமுதல் நீங்கள் அவரை அறிந்தும் அவரைக் கண்டும் இருக்கிறீர்கள் என்றார். பிலிப்பு அவரை நோக்கி: ஆண்டவரே, பிதாவை எங்களுக்குக் காண்பியும், அது எங்களுக்குப் போதும் என்றான். அதற்கு இயேசு: பிலிப்புவே, இவ்வளவுகாலம் நான் உங்களுடனேகூட இருந்தும் நீ என்னை அறியவில்லையா? என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்; அப்படியிருக்க, பிதாவை எங்களுக்குக் காண்பியும் என்று நீ எப்படிச் சொல்லுகிறாய்? நான் பிதாவிலும், பிதா என்னிலும் இருக்கிறதை நீ விசுவாசிக்கிறதில்லையா? நான் உங்களுடனே சொல்லுகிற வசனங்களை என் சுயமாய்ச் சொல்லவில்லை; என்னிடத்தில் வாசமாயிருக்கிற பிதாவானவரே இந்தக் கிரியைகளைச் செய்துவருகிறார்.

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த யோவான் 14:5-10

கிறிஸ்துமஸ் இதயத்தில் உள்ளது - 7 நாள் வீடியோ திட்டம் யோவான் 14:5-10 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

கிறிஸ்துமஸ் இதயத்தில் உள்ளது - 7 நாள் வீடியோ திட்டம்

7 நாட்களில்

கிறிஸ்துமஸ் இதயத்தில் உள்ளது" என்ற எங்கள் டிஜிட்டல் பிரச்சாரத்தின் மூலம் நீங்கள் கிறிஸ்மஸின் உண்மையான உணர்வை அனுபவிக்க முடியும். இந்த சிறப்பு நிகழ்ச்சி லுமோ கிறிஸ்துமஸ் திரைப்படத்தின் எழுச்சியூட்டும் காட்சிகள் மூலம் இயேசுவின் கதையை ஆராய்கிறது. தனிப்பட்ட சிந்தனை, அர்த்தமுள்ள உரையாடல்கள் மற்றும் சமூக ஈடுபாடு ஆகியவற்றை ஊக்குவிக்கிறது. பல மொழிகளில் வழங்கப்படும், இது கிறிஸ்துமஸ் சீசன் முழுவதும் இந்த மகிழ்ச்சியான அனுபவத்தை பகிர்ந்து கொள்ள அனைத்து பின்னணியிலும் உள்ள மக்களை ஒன்றிணைக்கிறது.