யோவான் 14:3-13

யோவான் 14:3-13 TAOVBSI

நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை ஆயத்தம்பண்ணினபின்பு, நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன். நான் போகிற இடத்தை அறிந்திருக்கிறீர்கள், வழியையும் அறிந்திருக்கிறீர்கள் என்றார். தோமா அவரை நோக்கி: ஆண்டவரே, நீர் போகிற இடத்தை அறியோமே, வழியை நாங்கள் எப்படி அறிவோம் என்றான். அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான். என்னை அறிந்தீர்களானால் என் பிதாவையும் அறிந்திருப்பீர்கள்; இதுமுதல் நீங்கள் அவரை அறிந்தும் அவரைக் கண்டும் இருக்கிறீர்கள் என்றார். பிலிப்பு அவரை நோக்கி: ஆண்டவரே, பிதாவை எங்களுக்குக் காண்பியும், அது எங்களுக்குப் போதும் என்றான். அதற்கு இயேசு: பிலிப்புவே, இவ்வளவுகாலம் நான் உங்களுடனேகூட இருந்தும் நீ என்னை அறியவில்லையா? என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்; அப்படியிருக்க, பிதாவை எங்களுக்குக் காண்பியும் என்று நீ எப்படிச் சொல்லுகிறாய்? நான் பிதாவிலும், பிதா என்னிலும் இருக்கிறதை நீ விசுவாசிக்கிறதில்லையா? நான் உங்களுடனே சொல்லுகிற வசனங்களை என் சுயமாய்ச் சொல்லவில்லை; என்னிடத்தில் வாசமாயிருக்கிற பிதாவானவரே இந்தக் கிரியைகளைச் செய்துவருகிறார். நான் பிதாவிலும் பிதா என்னிலும் இருக்கிறதை நம்புங்கள்; அப்படியில்லாவிட்டாலும் என் கிரியைகளினிமித்தமாவது என்னை நம்புங்கள். மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; நான் என் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினால், என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான், இவைகளைப்பார்க்கிலும் பெரிய கிரியைகளையும் செய்வான். நீங்கள் என் நாமத்தினாலே எதைக் கேட்பீர்களோ, குமாரனில் பிதா மகிமைப்படும்படியாக, அதைச் செய்வேன்.

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த யோவான் 14:3-13

கிறிஸ்துமஸை நாம் கொண்டாடும்போது கிறிஸ்துவின் இரண்டாம் வருகையின் முக்கியத்துவத்தைப் பிரதிபலிக்கிறோம் யோவான் 14:3-13 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

கிறிஸ்துமஸை நாம் கொண்டாடும்போது கிறிஸ்துவின் இரண்டாம் வருகையின் முக்கியத்துவத்தைப் பிரதிபலிக்கிறோம்

4 நாட்கள்

கிறிஸ்துவின் பிறப்பின் காலம் என்பது உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்களுக்கு மகிழ்ச்சியான எதிர்பார்ப்பு மற்றும் பிரதிபலிப்பு நேரம். நாம் கிறிஸ்துமஸைக் கொண்டாடும்போது, ​​கிறிஸ்துவின் முதலாம் வருகையின் தாழ்மையான ஒரு முன்னணையில் இருந்து அவரது இரண்டாவது வருகையின் மகிமையான கிரீடத்திற்கு நம் கவனத்தை செலுத்த இது ஒரு முக்கியமான நேரம். இந்த மாற்றத்தின் முக்கியத்துவத்தையும் அதன் கருத்து என்ன என்பதை ஆராய்வோம். இது கிறிஸ்துவின் முதல் வருகை. ஒரு தாழ்மையான குழந்தையாக கிறிஸ்துவின் முதல் வருகையின் சத்தியங்களை வேதாகமத்திலிருந்து வாசித்து அறிந்து இக்காலத்தில் தியானிப்போம். இயேசு கிறிஸ்துவின் முதலாம் வருகை மற்றும் இரண்டாம் வருகை இவற்றுக்கிடையே இருக்கும் முக்கியத்தையும் அறிந்து கொள்ளுவோம்.

கிறிஸ்துமஸ் இதயத்தில் உள்ளது - 7 நாள் வீடியோ திட்டம் யோவான் 14:3-13 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

கிறிஸ்துமஸ் இதயத்தில் உள்ளது - 7 நாள் வீடியோ திட்டம்

7 நாட்களில்

கிறிஸ்துமஸ் இதயத்தில் உள்ளது" என்ற எங்கள் டிஜிட்டல் பிரச்சாரத்தின் மூலம் நீங்கள் கிறிஸ்மஸின் உண்மையான உணர்வை அனுபவிக்க முடியும். இந்த சிறப்பு நிகழ்ச்சி லுமோ கிறிஸ்துமஸ் திரைப்படத்தின் எழுச்சியூட்டும் காட்சிகள் மூலம் இயேசுவின் கதையை ஆராய்கிறது. தனிப்பட்ட சிந்தனை, அர்த்தமுள்ள உரையாடல்கள் மற்றும் சமூக ஈடுபாடு ஆகியவற்றை ஊக்குவிக்கிறது. பல மொழிகளில் வழங்கப்படும், இது கிறிஸ்துமஸ் சீசன் முழுவதும் இந்த மகிழ்ச்சியான அனுபவத்தை பகிர்ந்து கொள்ள அனைத்து பின்னணியிலும் உள்ள மக்களை ஒன்றிணைக்கிறது.