யோவான் 1:4-12

யோவான் 1:4-12 TAOVBSI

அவருக்குள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது. அந்த ஒளி இருளிலே பிரகாசிக்கிறது; இருளானது அதைப் பற்றிக்கொள்ளவில்லை. தேவனால் அனுப்பப்பட்ட ஒரு மனுஷன் இருந்தான், அவன் பேர் யோவான். அவன் தன்னால் எல்லாரும் விசுவாசிக்கும்படி அந்த ஒளியைக்குறித்துச் சாட்சிகொடுக்க சாட்சியாக வந்தான். அவன் அந்த ஒளியல்ல, அந்த ஒளியைக்குறித்துச் சாட்சிகொடுக்க வந்தவனாயிருந்தான். உலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி. அவர் உலகத்தில் இருந்தார், உலகம் அவர் மூலமாய் உண்டாயிற்று, உலகமோ அவரை அறியவில்லை. அவர் தமக்குச் சொந்தமானதிலே வந்தார், அவருக்குச் சொந்தமானவர்களோ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனை பேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார்.

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த யோவான் 1:4-12

ஈஸ்டர் என்பது சிலுவை - 4 நாள் வீடியோ திட்டம் யோவான் 1:4-12 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

ஈஸ்டர் என்பது சிலுவை - 4 நாள் வீடியோ திட்டம்

4 நாட்களில்

எங்களின் "ஈஸ்டர் இஸ் தி கிராஸ்" டிஜிட்டல் காம்பைங் மூலம் ஈஸ்டரின் உண்மையான உணர்வை அனுபவிக்கவும், லுமோ ஈஸ்டர் திரைப்படங்களில் இருந்து ஊக்கமளிக்கும் வீடியோகள் மூலம் இயேசுவின் கதையை ஆராய இந்த சிறப்பு நிகழ்ச்சி உங்களை அழைக்கிறது, தனிப்பட்ட சிந்தனை, அர்த்தமுள்ள உரையாடல்கள் மற்றும் சமூக ஈடுபாட்டை ஊக்குவிக்கிறது. இயேசுவின் வாழ்க்கை, ஊழியம் மற்றும் பேரார்வம் ஆகியவற்றை சிறப்பித்துக் காட்டும் உள்ளடக்கத்துடன், இந்த திட்டம் பல மொழிகளில் வழங்கப்படுகிறது, ஈஸ்டர் சீசன் முழுவதும் நம்பிக்கை மற்றும் மீட்பின் செய்தியில் பகிர்ந்து கொள்ள அனைத்து பின்னணியிலிருந்தும் மக்களை ஒன்றிணைக்கிறது.