நீங்கள் சொஸ்தமடையும்படிக்கு, உங்கள் குற்றங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டு, ஒருவருக்காக ஒருவர் ஜெபம்பண்ணுங்கள். நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது. எலியா என்பவன் நம்மைப்போலப் பாடுள்ள மனுஷனாயிருந்தும், மழைபெய்யாதபடிக்குக் கருத்தாய் ஜெபம்பண்ணினான், அப்பொழுது மூன்று வருஷமும் ஆறு மாதமும் பூமியின்மேல் மழை பெய்யவில்லை. மறுபடியும் ஜெபம்பண்ணினான், அப்பொழுது வானம் மழையைப் பொழிந்தது, பூமி தன் பலனைத் தந்தது. சகோதரரே, உங்களில் ஒருவன் சத்தியத்தைவிட்டு விலகி மோசம்போகும்போது, மற்றொருவன் அவனைத் திருப்பினால், தப்பிப்போன மார்க்கத்தினின்று பாவியைத் திருப்புகிறவன் ஒரு ஆத்துமாவை மரணத்தினின்று இரட்சித்து, திரளான பாவங்களை மூடுவானென்று அறியக்கடவன்.
வாசிக்கவும் யாக்கோபு 5
கேளுங்கள் யாக்கோபு 5
பகிர்
அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக: யாக்கோபு 5:16-20
5 நாட்களில்
ஜர்னலிங் என்பது .உங்கள் எண்ணங்களையும் உணர்வுகளையும் இன்னும் தெளிவாகப் புரிந்துகொள்ள அவற்றை எழுதுவது ஆகும்.நாம் மன அழுத்தம், மனச்சோர்வு அல்லது பதட்டத்துடன் போராடினால், ஒரு ஜர்னல் அல்லது ஒரு குறிப்பேடு வைத்திருப்பது ஒரு சிறந்த யோசனையாக இருக்கும். பிலிப்பியர் 4:6-7 [6] நீங்கள் ஒன்றுக்குங்கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். [7] அப்பொழுது, எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்.இது நம் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தவும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும்.
6 நாட்கள்
வல்லமையான, பதில்பெறும் ஜெப வாழ்க்கையைக் கட்டியெழுப்பும் கோட்பாடுகளைத் தெரிந்துகொள்ளுங்கள். நமது வாழ்விலும், சூழலிலும் சாதகமான மாறுதலுக்கான வழியைத் திறக்கும் சாவியே ஜெபம் – தனிநபராகத் தேவனோடு கொண்டுள்ள உறவு. இது David J. Swandt அவர்கள் எழுதிய “இந்த உலகிற்கும் அப்பால் : கிறிஸ்தவ வளர்ச்சிக்கும் நோக்கத்துக்குமான வழிகாட்டி” (A Christian’s Guide to Growth and Purpose) என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது.
7 Days
Taken from his book "AHA," join Kyle Idleman as he discovers the 3 elements that can draw us closer to God and change our lives for good. Are you ready for the God moment that changes everything?
7 நாட்கள்
பொதுவாக மனிதர்கள் என்ற முறையில், அதிலும் குறிப்பாக கிறிஸ்தவர்கள் என்ற கண்ணோட்டத்தில் , நாம் அனைவருமே , பல்வேறு மட்டங்களில் , தேவனுக்கும் , நமது குடும்பத்திற்கும் , நண்பர்களுக்கும் , பணி செய்யும் இடங்களில் நமது முதலாளிக்கும் , நம்முடன் இணைந்து பணியாற்றும் குழுவினருக்கும் கணக்கு ஒப்புவிக்கும் பொறுப்புடையவர்களாய் இருக்கின்றோம். ஆனால் , மனித இயல்பானது ,யாருக்கும் கணக்கு ஒப்புவிக்க விரும்புவதில்லை. கடவுளுக்கு கணக்கு ஒப்புவித்தல் என்பது மற்ற எல்லா பொறுப்புடைமைக்கும் பொருந்தக்கூடிய அடிப்படை அம்சமாகும் .
வசனங்களைச் சேமிக்க, ஆஃப்லைனில் படிக்க, கற்பித்தல் கிளிப்களைப் பார்க்க மற்றும் பல!
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்