எசேக்கியா ஸ்தானாபதிகளின் கையிலிருந்த நிருபத்தை வாங்கி வாசித்தான்; பின்பு எசேக்கியா கர்த்தருடைய ஆலயத்திற்குப் போய் அதைக் கர்த்தருக்கு முன்பாக விரித்து, கர்த்தரை நோக்கி: சேனைகளின் கர்த்தாவே, கேருபீன்களின் மத்தியில் வாசம்பண்ணுகிற இஸ்ரவேலின் தேவனே, நீர் ஒருவரே பூமியின் ராஜ்யங்களுக்கெல்லாம் தேவனானவர்; நீர் வானத்தையும் பூமியையும் உண்டாக்கினீர். கர்த்தாவே, உமது செவியைச் சாய்த்துக்கேளும்; கர்த்தாவே, நீர் உமது கண்களைத் திறந்துபாரும், சனகெரிப் ஜீவனுள்ள தேவனை நிந்திக்கும்படிக்குச் சொல்லியனுப்பின வார்த்தைகளையெல்லாம் கேளும். கர்த்தாவே, அசீரியா ராஜாக்கள் அந்த ஜாதிகளையும், அவர்கள் தேசத்தையும் நாசமாக்கி, அவர்களுடைய தேவர்களை நெருப்பிலே போட்டுவிட்டது மெய்தான்; அவைகள் தேவர்கள் அல்லவே, மனுஷர் கைவேலையான மரமும் கல்லுந்தானே; ஆகையால் அவைகளை நிர்த்தூளியாக்கினார்கள். இப்போதும் எங்கள் தேவனாகிய கர்த்தாவே, நீர் ஒருவரே கர்த்தர் என்று பூமியின் ராஜ்யங்களெல்லாம் அறியும்படிக்கு, எங்களை அவன் கைக்கு நீங்கலாக்கி இரட்சியும் என்று விண்ணப்பம் பண்ணினான்.
வாசிக்கவும் ஏசாயா 37
கேளுங்கள் ஏசாயா 37
பகிர்
அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக: ஏசாயா 37:14-20
5 நாட்கள்
நாம் கவலைப்படுகிற சுபாவம் கொண்டவர்களாய் இருப்போமென்றால், அதை, தேவனிடம் ஒப்படைப்பது நல்லது. தேவன் நம்மேல் மிகுந்த அக்கரை கொண்டவராய் இருப்பதினாலே; தம்முடைய பரந்த ஞானத்தையும், வல்லமையையும் நம் சார்பில் செயல்படுத்த எப்பொழுதும் தயாராக உள்ளார். நட்சத்திரங்களை பாமரிக்கிற தேவனின் அன்பு கரங்கள் நம்மை எப்பொழுதும் சூழ்ந்து கொண்டிருக்கிறது. இப்பேர்ப்பட்ட தேவனை விசுவாசித்து கவலயை மேற்கொள்வோம். விசுவசம் தோன்றும் வேளையில், கவலை மறைகிறது.
வசனங்களைச் சேமிக்க, ஆஃப்லைனில் படிக்க, கற்பித்தல் கிளிப்களைப் பார்க்க மற்றும் பல!
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்