எபிரெயர் 2:14-18

எபிரெயர் 2:14-18 TAOVBSI

ஆதலால், பிள்ளைகள் மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவர்களாயிருக்க, அவரும் அவர்களைப்போல மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவரானார்; மரணத்துக்கு அதிகாரியாகிய பிசாசானவனைத் தமது மரணத்தினாலே அழிக்கும்படிக்கும், ஜீவகாலமெல்லாம் மரணபயத்தினாலே அடிமைத்தனத்திற்குள்ளானவர்கள் யாவரையும் விடுதலைபண்ணும்படிக்கும் அப்படியானார். ஆதலால், அவர் தேவதூதருக்கு உதவியாகக் கைகொடாமல், ஆபிரகாமின் சந்ததிக்கு உதவியாகக் கைகொடுத்தார். அன்றியும், அவர் ஜனத்தின் பாவங்களை நிவிர்த்தி செய்வதற்கேதுவாக, தேவகாரியங்களைக்குறித்து இரக்கமும் உண்மையுமுள்ள பிரதான ஆசாரியராயிருக்கும்படிக்கு எவ்விதத்திலும் தம்முடைய சகோதரருக்கு ஒப்பாகவேண்டியதாயிருந்தது. ஆதலால், அவர்தாமே சோதிக்கப்பட்டுப் பாடுபட்டதினாலே, அவர் சோதிக்கப்படுகிறவர்களுக்கு உதவிசெய்ய வல்லவராயிருக்கிறார்.

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த எபிரெயர் 2:14-18

இரட்சிப்பு எபிரெயர் 2:14-18 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

இரட்சிப்பு

3 நாட்களில்

இரட்சிப்பு மனுக்குலம் முழுவதும் முழு ஏக்கத்தோடு வேண்டிநிற்பது இரட்சிப்பு. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிலையிலும் இரட்சிப்பு தேவை. கடின உழைப்போடு பல கஷ்டங்கள் பிரயாசங்கள் ஏற்று மனிதன் இந்த இரட்சிப்புக்காக பல திசை நோக்கி இடம் நோக்கி புண்ணிய ஸ்தலம் நோக்கி அலைந்து திரிகிறான். மனிதன் கடவுளை அடைய விரும்புகிறான் ஆனால் கடவுளோ மனிதனை தேடி சிலுவையில் வந்து தனது இரத்தம் சிந்தி மீட்டுக் கொண்டாரென்ற இந்த உண்மையே இரட்சிப்பின் அடிப்படை. இயேசுகிறிஸ்து எனது பாவங்களுக்காக மரித்தாரென ஒப்புக்கொண்டு விசுவாசத்தோடு அவரது இரத்தத்தினால் தன்னை கழுவி சுத்திகரித்துக்கொள்வதே இரட்சிப்பு. இது இன்றைக்கே சொந்தமாக வேண்டியது. என்றைக்கும் நிலைத்து நிற்பது. இது இலவசமானது உண்மையான மனந்திரும்புதலை கொண்டு இலவசமான இந்த பாவமன்னிப்பை பெற்றுக் கொள்வதே இரட்சிப்பு. இன்றே இரட்சிப்பின் நாள். இதை அனுபவமாக்க வேண்டும்.