பார்வோன் அந்தக் காரியத்தைக் கேள்விப்பட்டபோது, மோசேயைக் கொலைசெய்ய வகைதேடினான். மோசே பார்வோனிடத்தினின்று தப்பியோடி, மீதியான் தேசத்தில் போய்த் தங்கி, ஒரு துரவண்டையிலே உட்கார்ந்திருந்தான். மீதியான் தேசத்து ஆசாரியனுக்கு ஏழு குமாரத்திகள் இருந்தார்கள்; அவர்கள் தங்கள் தகப்பனுடைய ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டும்படிக்கு அங்கே வந்து, தண்ணீர் மொண்டு, தொட்டிகளை நிரப்பினார்கள். அப்பொழுது மேய்ப்பர்கள் வந்து, அவர்களைத் துரத்தினார்கள்; மோசே எழுந்திருந்து, அவர்களுக்குத் துணை நின்று, அவர்களுடைய ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டினான். அவர்கள் தங்கள் தகப்பனாகிய ரெகுவேலிடத்தில் வந்தபோது, அவன்: நீங்கள் இன்று இத்தனை சீக்கிரமாய் வந்தது என்ன என்று கேட்டான். அதற்கு அவர்கள்: எகிப்தியன் ஒருவன் மேய்ப்பரின் கைகளுக்கு எங்களைத் தப்புவித்து, எங்களுக்குத் தண்ணீர் மொண்டு கொடுத்து, ஆடுகளுக்கும் தண்ணீர் காட்டினான் என்றார்கள். அப்பொழுது அவன் தன் குமாரத்திகளைப் பார்த்து, அவன் எங்கே? அந்த மனிதனை நீங்கள் விட்டுவந்தது என்ன? போஜனம் பண்ணும்படிக்கு அவனை அழைத்துக் கொண்டுவாருங்கள் என்றான்.
வாசிக்கவும் யாத்திராகமம் 2
கேளுங்கள் யாத்திராகமம் 2
பகிர்
அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக: யாத்திராகமம் 2:15-20
7 நாட்கள்
ஒருவர் துன்புறுத்தப்படும்போது, பயம் என்பது அவர்களின் மிக சக்திவாய்ந்த உணர்ச்சிகளில் ஒன்றாகும். தாக்குதல்கள், சிறைவாசம், தேவாலயங்கள் மூடப்படுதல், மற்றும் விசுவாசத்தின் காரணமாக அன்பானவர்கள் மற்றும் சக விசுவாசிகளின் மரணம் அனைத்தும் நமது கிறிஸ்தவ பயணத்தில் முன்னேற பயந்து, உதவியற்றவர்களாக உணரலாம். நீங்கள் இப்போது துன்புறுத்தலுக்கு பயப்படுகிறீர்கள் என்றால், துன்புறுத்தலை எதிர்கொள்ளும்போது அச்சத்தை எதிர்கொள்ள உங்களை தயார்படுத்த இந்த வாசிப்புத் திட்டம் ஒரு சிறந்த வழியாகும்.
வசனங்களைச் சேமிக்க, ஆஃப்லைனில் படிக்க, கற்பித்தல் கிளிப்களைப் பார்க்க மற்றும் பல!
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்