2 தீமோத்தேயு 1:7-12

2 தீமோத்தேயு 1:7-12 TAOVBSI

தேவன் நமக்குப் பயமுள்ள ஆவியைக் கொடாமல், பலமும் அன்பும் தெளிந்த புத்தியுமுள்ள ஆவியையே கொடுத்திருக்கிறார். ஆகையால் நம்முடைய கர்த்தரைப் பற்றிய சாட்சியைக்குறித்தாவது, அவர் நிமித்தம் கட்டப்பட்டிருக்கிற என்னைக் குறித்தாவது, நீ வெட்கப்படாமல், தேவவல்லமைக்கேற்றபடி சுவிசேஷத்திற்காக என்னோடேகூடத் தீங்கனுபவி. அவர் நம்முடைய கிரியைகளின்படி நம்மை இரட்சிக்காமல், தம்முடைய தீர்மானத்தின்படியும், ஆதிகாலமுதல் கிறிஸ்து இயேசுவுக்குள் நமக்கு அருளப்பட்ட கிருபையின்படியும், நம்மை இரட்சித்து, பரிசுத்த அழைப்பினாலே அழைத்தார். நம்முடைய இரட்சகராகிய இயேசு கிறிஸ்து பிரசன்னமானதினாலே அந்தக் கிருபை இப்பொழுது வெளிப்படுத்தப்பட்டது; அவர் மரணத்தைப் பரிகரித்து, ஜீவனையும் அழியாமையையும் சுவிசேஷத்தினாலே வெளியரங்கமாக்கினார். அதற்கு நான் பிரசங்கியாகவும், அப்போஸ்தலனாகவும், புறஜாதியாருக்குப் போதகனாகவும் நியமிக்கப்பட்டேன். அதினிமித்தம் நான் இந்தப் பாடுகளையும் அனுபவிக்கிறேன்; ஆயினும், நான் வெட்கப்படுகிறதில்லை; ஏனென்றால், நான் விசுவாசித்திருக்கிறவர் இன்னார் என்று அறிவேன், நான் அவரிடத்தில் ஒப்புக்கொடுத்ததை அவர் அந்நாள்வரைக்கும் காத்துக்கொள்ள வல்லவராயிருக்கிறாரென்று நிச்சயித்துமிருக்கிறேன்.

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த 2 தீமோத்தேயு 1:7-12

தேவனின் நோக்கத்தையே முன் வைத்து வாழும் ஒரு வாழ்வு 2 தீமோத்தேயு 1:7-12 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

தேவனின் நோக்கத்தையே முன் வைத்து வாழும் ஒரு வாழ்வு

4 நாட்களில்

தேவனின் நோக்கத்தை முன்பாக வைத்து வாழ விரும்பும் நம் வாழ்வில் நமக்கு நம் நம்பிக்கையை சோதிக்கும், பயத்தை தூண்டி, குற்ற உணர்ச்சியாலும் வருத்தத்தாலும் நம்மைச் சுமையாக்கும் சவால்களை வாழ்க்கை அடிக்கடி கொண்டுவருகிறது. ஆனாலும், நம்முடைய விசுவாசம் என்பது தேவனின் நோக்கமும் கிருபையும் நமக்கு துணையாக நின்று ஜெயிப்பதற்கான பலத்தை நமக்கு அளிக்கிறது. சந்தேகங்களை எதிர்கொள்வதற்கும், அச்சங்களை வெல்வதற்கும், மன்னிப்பை ஏற்றுக்கொள்வதற்கும், வருத்தத்தை அறிக்கை செய்வதற்கும் இந்த வேதாகமப் பாடங்களையும் நடைமுறைப் படிகளையும் ஆராய உங்களை அழைக்கிறது. தேவனின் வாக்குறுதிகளை நம்பி, அவருடைய கிருபையில் நம்பிக்கையுடன் நடக்க, தைரியமாக வாழ இந்தப் பிரதிபலிப்புகள் உங்களைத் தூண்டட்டும்.