2 கொரிந்தியர் 12:2-12

2 கொரிந்தியர் 12:2-12 TAOVBSI

கிறிஸ்துவுக்குள்ளான ஒரு மனுஷனை அறிவேன்; அவன் பதினாலு வருஷத்திற்கு முன்னே மூன்றாம் வானம்வரைக்கும் எடுக்கப்பட்டான்; அவன் சரீரத்திலிருந்தானோ, சரீரத்திற்குப் புறம்பேயிருந்தானோ, அதை அறியேன்; தேவன் அறிவார். அந்த மனுஷன் பரதீசுக்குள் எடுக்கப்பட்டு, மனுஷர் பேசப்படாததும் வாக்குக்கெட்டாததுமாகிய வார்த்தைகளைக் கேட்டானென்று அறிந்திருக்கிறேன். அவன் சரீரத்திலிருந்தானோ, சரீரத்திற்குப் புறம்பேயிருந்தானோ, அதை அறியேன்; தேவன் அறிவார். இப்படிப்பட்டவனைக்குறித்து மேன்மைபாராட்டுவேன்; ஆனாலும் என்னைக்குறித்து என் பலவீனங்களிலேயன்றி, வேறொன்றிலும் மேன்மைபாராட்ட மாட்டேன். சத்தியமானதை நான் பேசுகிறேன்; நான் மேன்மைபாராட்ட மனதாயிருந்தாலும், நான் புத்தியீனனல்ல, ஆனாலும் ஒருவனும் என்னிடத்தில் காண்கிறதற்கும், என்னாலே கேட்கிறதற்கும் மேலாக என்னை எண்ணாதபடிக்கு அப்படிச் செய்யாதிருப்பேன். அன்றியும், எனக்கு வெளிப்படுத்தப்பட்டவைகளுக்குரிய மேன்மையினிமித்தம் நான் என்னை உயர்த்தாதபடிக்கு, என் மாம்சத்திலே ஒரு முள் கொடுக்கப்பட்டிருக்கிறது; என்னை நான் உயர்த்தாதபடிக்கு, அது என்னைக் குட்டும் சாத்தானுடைய தூதனாயிருக்கிறது. அது என்னைவிட்டு நீங்கும்படிக்கு, நான் மூன்றுதரம் கர்த்தரிடத்தில் வேண்டிக்கொண்டேன். அதற்கு அவர்: என் கிருபை உனக்குப்போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும் என்றார். ஆகையால், கிறிஸ்துவின் வல்லமை என்மேல் தங்கும்படி, என் பலவீனங்களைக்குறித்து நான் மிகவும் சந்தோஷமாய் மேன்மைபாராட்டுவேன். அந்தப்படி நான் பலவீனமாயிருக்கும்போதே பலமுள்ளவனாயிருக்கிறேன்; ஆகையால் கிறிஸ்துவினிமித்தம் எனக்கு வரும் பலவீனங்களிலும், நிந்தைகளிலும், நெருக்கங்களிலும், துன்பங்களிலும், இடுக்கண்களிலும் நான் பிரியப்படுகிறேன். மேன்மைபாராட்டி, புத்தியீனனாயினேன்; நீங்களே இதற்கு என்னைப் பலவந்தப்படுத்தினீர்கள். நான் ஒன்றுமில்லையென்றாலும், மகா பிரதான அப்போஸ்தலருக்கும் நான் எவ்வளவும் குறைந்த வனாயிராதபடியால், உங்களாலே மெச்சிக்கொள்ளப்படவேண்டியதாயிருந்ததே. அப்போஸ்தலனுக்குரிய அடையாளங்கள் எல்லாவிதமான பொறுமையோடும், அதிசயங்களோடும், அற்புதங்களோடும், வல்லமைகளோடும், உங்களுக்குள்ளே நடப்பிக்கப்பட்டதே.

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த 2 கொரிந்தியர் 12:2-12

முழுமையை நோக்கும் சபை 2 கொரிந்தியர் 12:2-12 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

முழுமையை நோக்கும் சபை

3 நாட்கள்

சபையாக கூடி வாழும் வாழ்வில் முழுமைப் பெற வாஞ்சிப்பது முக்கியத்துவம் வாய்ந்தது . கடவுள் இதை விரும்புகிறார். அவர் தம் ஊழியர்களை தெரிந்து, பயிற்றுவித்து சபையை முழுமையை நோக்கி பயணிக்க வைக்கிறார். இதன் வழியில் வரும் சங்கடங்கள் தெரிந்திருக்க வேண்டும். தார்ப்பரியங்களை தைரியமாய் கூறி, தேவைப் பட்டால் தழும்புகள் பெற்றும் இப்பாதையில் நம்மை நடத்தும் தலைவர்களையும் கொண்டிருக்க வேண்டும் . தரிசனங்களும் வெளிப்பாடுகளும் நமது பெலத்தையும், பெலவீனத்தையும் வெளிக்கொணற வேண்டும். களத்திருச்சபைகளை பெற்று அதன் மீது கரிசனை கொள்ளவேண்டும். அப்போதைக்கு அப்போது அத்து மீறி நடப்போரை கண்டித்துணர்த்தி கை கோர்த்து திருத்தி வாழ பிரயாசம் வேண்டும். முழுமையை பெற்றோம் என்றல்ல அடைவோம் என்ற நம்பிக்கையோடு தேவ அன்பிலும், கிறிஸ்துவின் கிருபையாலும், பரிசுத்த ஆவியானவரின் ஐக்கியத்திலும் வேரூன்றி முடிவுபரியந்தம் நிலைத்து வாழ்வோம். நித்தியம் நமது முழுமை. ஆமென்.