மரித்தோரின் உயிர்த்தெழுதலும் அப்படியே இருக்கும். அழிவுள்ளதாய் விதைக்கப்படும், அழிவில்லாததாய் எழுந்திருக்கும்; கனவீனமுள்ளதாய் விதைக்கப்படும், மகிமையுள்ளதாய் எழுந்திருக்கும்; பலவீனமுள்ளதாய் விதைக்கப்படும், பலமுள்ளதாய் எழுந்திருக்கும். ஜென்மசரீரம் விதைக்கப்படும், ஆவிக்குரிய சரீரம் எழுந்திருக்கும்; ஜென்மசரீரமுமுண்டு, ஆவிக்குரிய சரீரமுமுண்டு. அந்தப்படியே முந்தின மனுஷனாகிய ஆதாம் ஜீவாத்துமாவானான் என்றெழுதியிருக்கிறது; பிந்தின ஆதாம் உயிர்ப்பிக்கிற ஆவியானார். ஆகிலும் ஆவிக்குரிய சரீரம் முந்தினதல்ல, ஜென்மசரீரமே முந்தினது; ஆவிக்குரிய சரீரம் பிந்தினது. முந்தின மனுஷன் பூமியிலிருந்துண்டான மண்ணானவன்; இரண்டாம் மனுஷன் வானத்திலிருந்து வந்த கர்த்தர். மண்ணானவன் எப்படிப்பட்டவனோ மண்ணானவர்களும் அப்படிப்பட்டவர்களே; வானத்துக்குரியவர் எப்படிப்பட்டவரோ, வானத்துக்குரியவர்களும் அப்படிப்பட்டவர்களே. மேலும் மண்ணானவனுடைய சாயலை நாம் அணிந்திருக்கிறதுபோல, வானவருடைய சாயலையும் அணிந்துகொள்ளுவோம். சகோதரரே, நான் சொல்லுகிறதென்னவெனில், மாம்சமும் இரத்தமும் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிக்கமாட்டாது; அழிவுள்ளது அழியாமையைச் சுதந்தரிப்பதுமில்லை. இதோ, ஒரு இரகசியத்தை உங்களுக்கு அறிவிக்கிறேன்; நாமெல்லாரும் நித்திரையடைவதில்லை; ஆகிலும் கடைசி எக்காளம் தொனிக்கும்போது, ஒரு நிமிஷத்திலே, ஒரு இமைப்பொழுதிலே, நாமெல்லாரும் மறுரூபமாக்கப்படுவோம். எக்காளம் தொனிக்கும், அப்பொழுது மரித்தோர் அழிவில்லாதவர்களாய் எழுந்திருப்பார்கள்; நாமும் மறுரூபமாக்கப்படுவோம். அழிவுள்ளதாகிய இது அழியாமையையும், சாவுக்கேதுவாகிய இது சாவாமையையும் தரித்துக்கொள்ளவேண்டும். அழிவுள்ளதாகிய இது அழியாமையையும், சாவுக்கேதுவாகிய இது சாவாமையையும் தரித்துக்கொள்ளும்போது, மரணம் ஜெயமாக விழுங்கப்பட்டது என்று எழுதியிருக்கிற வார்த்தை நிறைவேறும். மரணமே! உன் கூர் எங்கே? பாதாளமே! உன் ஜெயம் எங்கே?
வாசிக்கவும் 1 கொரிந்தியர் 15
கேளுங்கள் 1 கொரிந்தியர் 15
பகிர்
அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக: 1 கொரிந்தியர் 15:42-55
3 நாட்கள்
கூடி வாழும் சபையிலே அவரவருக்குப் பொறுப்புண்டு அந்தந்தப் பொறுப்பை அவரவருக்கு அளிக்கப்பட்ட வரத்தைக் கொண்டுசெயல்பட்டு தேவ நோக்கத்தை சபையில் வெளிக்கொணரs வேண்டும். இப்படி கூட்டுப்பொறுப்பில் இணைந்து தேவ பெலத்தோடு பொது வாழ்வின் பொறுப்பை அர்த்தமுள்ளதாக்கவேண்டும். இதைக் கண்டு உலக மக்கள் பயன் பெற்று தேவனிடத்தில் வந்தடையவேண்டும். சபையார் தனதுபொறுப்பை செய்து எதிர்கால மகிமைக்கென்று தம்மைக் காத்துக்கொண்டு பரிகரிக்கவேண்டிய கடைசி சத்துருவாகிய மரணத்தை வென்று உயிர்த்தெழுதலின் பங்குள்ளவர்களாகி பரம பாக்கியம் பெற வேண்டும். முடிவோ நித்திய ஜீவன். கிறிஸ்துவோடு கிறிஸ்துவின் சபை என்றும் வாழும். ஆமென்.
24 நாட்கள்
"ஒரு கிறிஸ்தவர் எப்படி வாழ வேண்டும்?" கொரிந்தியர்களுக்கு எழுதிய முதல் கடிதத்தில், இளம் கிறிஸ்தவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு நடைமுறை கவனிப்பு மற்றும் திருத்தம் கொடுக்கப்பட்ட தலைப்பு. நீங்கள் ஆடியோ படிப்பைக் கேட்கும்போதும், கடவுளுடைய வார்த்தையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட வசனங்களைப் படிக்கும்போதும் 1 கொரிந்தியன்ஸ் மூலம் தினசரி பயணம் செய்யுங்கள்.
வசனங்களைச் சேமிக்க, ஆஃப்லைனில் படிக்க, கற்பித்தல் கிளிப்களைப் பார்க்க மற்றும் பல!
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்