மத்தேயு 25:23

மத்தேயு 25:23 TRV

“அதற்கு அவனுடைய எஜமான், ‘நன்றாய் செய்தாய், உண்மையுள்ள நல்ல வேலைக்காரனே! நீ சிறியதில் உண்மையுள்ளவனாய் இருந்தாய்; அதனால் நான் உன்னை அநேக காரியங்களுக்குப் பொறுப்பாக வைப்பேன். வந்து, உனது எஜமானின் மனமகிழ்ச்சியில் பங்குகொள்’ என்றான்.

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த மத்தேயு 25:23

பொறுப்பு (கணக்கு  ஒப்புவித்தல்)  மத்தேயு 25:23 இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

பொறுப்பு (கணக்கு ஒப்புவித்தல்)

7 நாட்கள்

பொதுவாக  மனிதர்கள் என்ற  முறையில், அதிலும்  குறிப்பாக  கிறிஸ்தவர்கள்  என்ற கண்ணோட்டத்தில் ,  நாம்  அனைவருமே , பல்வேறு மட்டங்களில் , தேவனுக்கும் , நமது  குடும்பத்திற்கும் , நண்பர்களுக்கும் , பணி  செய்யும்  இடங்களில் நமது  முதலாளிக்கும் , நம்முடன்  இணைந்து  பணியாற்றும்  குழுவினருக்கும் கணக்கு  ஒப்புவிக்கும்  பொறுப்புடையவர்களாய்  இருக்கின்றோம். ஆனால் , மனித  இயல்பானது ,யாருக்கும்  கணக்கு ஒப்புவிக்க  விரும்புவதில்லை.  கடவுளுக்கு  கணக்கு  ஒப்புவித்தல்  என்பது  மற்ற  எல்லா  பொறுப்புடைமைக்கும்  பொருந்தக்கூடிய  அடிப்படை  அம்சமாகும் . 

தனித்துவமான உவமைகள் - ஆழமான அர்த்தங்கள் அடங்கிய சிறுகதைகள் மத்தேயு 25:23 இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

தனித்துவமான உவமைகள் - ஆழமான அர்த்தங்கள் அடங்கிய சிறுகதைகள்

30 நாட்களில்

இயேசு கிறிஸ்து பெரும்பாலும் போதிப்பதற்கு உவமைகளையே பயன்படுத்தினார். அதற்குக் காரணம் உண்டு: இந்த எளிய, ஆனால் ஆழமான கதைகள், ஆழ்ந்த ஆவிக்குரிய உண்மைகளையும், என்றென்றும் நிலைத்திருக்கக்கூடிய வாழ்க்கைப் பாடங்களையும், அவருடைய சீடர்கள் மற்றும் பொது மக்கள் எளிதாகப் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் இருந்தன. இந்தக் கதைகள் சொல்லப்பட்ட வரலாற்று மற்றும் கலாச்சாரப் பின்னணியை நாம் ஆராய்ந்து புரிந்துகொள்ள முயற்சி செய்யும்போது —அதை முதலில் கேட்டவர்களுக்கு அவை எந்தப் பொருளை உணர்த்தியதோ, அதே வகையில் நாமும் அதை புரிந்து உணர்ந்துகொள்ள நமக்கு உதவும்.