ரோமாபுரியாருக்கு எழுதிய கடிதம் 6:12-14

ரோமாபுரியாருக்கு எழுதிய கடிதம் 6:12-14 TAERV

ஆகையால் நீங்கள் சரீரங்களின் இச்சைப்படி பாவத்திற்குக் கீழ்ப்படிய அனுமதிக்காதீர்கள். சாவுக்கு ஏதுவான உங்கள் சரீரத்தில் பாவம் ஆளாமல் இருப்பதாக. நீங்கள் உங்கள் சரீரத்தின் பாகங்களை அநீதியின் கருவிகளாகப் பாவத்திற்கு ஒப்புக் கொடுக்காதீர்கள். ஆனால் நீங்கள் உங்களை இறந்தவர்களிடமிருந்து பிழைத்திருக்கிறவர்களாக தேவனுக்கு ஒப்புக்கொடுக்க வேண்டும். உங்கள் சரீர உறுப்புகளை நீதிக்குரிய கருவிகளாக தேவனுக்கு ஒப்புக்கொடுங்கள். பாவம் உங்களது எஜமானன் அல்ல. ஏனென்றால் நீங்கள் சட்ட விதிகளின் கீழ்ப்பட்டவர்கள் அல்லர். நீங்கள் இப்போது தேவனுடைய கிருபைக்குக் கீழ்ப்பட்டவர்களே.

ரோமாபுரியாருக்கு எழுதிய கடிதம் 6:12-14 க்கான வீடியோ

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த ரோமாபுரியாருக்கு எழுதிய கடிதம் 6:12-14

விடுதலையாக வாழ ரோமாபுரியாருக்கு எழுதிய கடிதம் 6:12-14 பரிசுத்த பைபிள்

விடுதலையாக வாழ

10 நாட்களில்

கிறிஸ்துவில் சுதந்திரம்: ஒரு புதிய தொடக்கம் கிறிஸ்துவில் நமக்குள்ள சுதந்திரம் என்பது வெறும் கோட்பாடு மட்டுமல்ல, அது நம் வாழ்வை மாற்றும் உன்னத உண்மை. ரோமர் 6-ன் படி, இயேசுவின் பலியால் நாம் பாவத்திலிருந்தும் சட்ட திட்டங்களிலிருந்தும் விடுவிக்கப்பட்டு, கிருபையினால் புதிய அடையாளத்தைப் பெற்றுள்ளோம். "விடுதலையாக வாழ" என்னும் இந்தப் புத்தகம், இந்தச் சுதந்திரத்தை அன்றாட வாழ்வில் எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பதை விளக்குகிறது. இது உங்கள் உறவுகள் மற்றும் முடிவுகளில் மாற்றத்தை ஏற்படுத்தி, நீதியுடனும் அன்புடனும் வாழ உங்களை வழிநடத்தும். இயேசு வாக்களித்த முழுமையான வாழ்வை அனுபவிக்க உங்களை அழைக்கும் ஒரு எளிய வழிகாட்டி இது