சங்கீத புத்தகம் 65:8-13

சங்கீத புத்தகம் 65:8-13 TAERV

நீர் செய்யும் அதிசயமான காரியங்களைக் கண்டு உலகமெங்கும் வாழும் ஜனங்கள் வியப்படைவார்கள். சூரிய உதயமும், சூரியன் மறைவும் எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியூட்டும். நீர் நிலத்தைப் பாதுகாக்கிறீர். நீருற்றி, தாவரங்கள் வளர வகைசெய்கிறீர். தேவனே, நீர் நீருற்றுகளில் தண்ணீரை நிரப்பி, பயிர்களை வளரச்செய்கிறீர். இவ்வாறு நீர் இதனைச் செய்கிறீர்: உழுத நிலங்களில் மழை தண்ணீரை ஊற்றுகிறீர். வயல்களை தண்ணீரால் நனையப் பண்ணுகிறீர். நிலத்தை மழையால் மிருதுவாக்குகிறீர். இளம்பயிர்கள் வளர்ந்தோங்கச் செய்கிறீர். நல்ல அறுவடையால் புத்தாண்டை ஆரம்பிக்கிறீர். பயிர்களால் வண்டிகளில் பாரமேற்றுகிறீர். பாலைவனங்களும் மலைகளும் புற்களால் நிரம்பின. புல்வெளிகளில் ஆட்டு மந்தைகள் நிரம்பின. பள்ளத்தாக்குகளில் தானியங்கள் நிரம்பின. ஒவ்வொருவரும் மகிழ்ச்சியால் ஆடிப்பாடிக் கொண்டிருந்தனர்.