சங்கீத புத்தகம் 51:1-7
சங்கீத புத்தகம் 51:1-7 TAERV
தேவனே உமது மிகுந்த அன்பான தயவினாலும் மிகுந்த இரக்கத்தினாலும் என்னிடம் இரக்கமாயிரும். என் பாவங்களை அழித்துவிடும். தேவனே, எனது குற்றத்தைத் துடைத்துவிடும். என் பாவங்களைக் கழுவிவிடும். என்னை மீண்டும் தூய்மைப்படுத்தும்! நான் பாவம் செய்தேனென அறிவேன். அப்பாவங்களை எப்போதும் நான் காண்கிறேன். நீர் தவறெனக்கூறும் காரியங்களைச் செய்தேன். தேவனே, நான் உமக்கு விரோதமாக பாவம் செய்தேன். நான் தவறு செய்தவன் என்பதையும், நீர் நியாயமானவர் என்பதையும், ஜனங்கள் அறியும் பொருட்டு இவற்றை அறிக்கையிடுகிறேன். உமது முடிவுகள் நியாயமானவை. நான் பாவத்தில் பிறந்தேன். என் தாய் என்னைப் பாவத்தில் கருவுற்றாள். தேவனே! நான் உண்மையும் நேர்மையும் உள்ளவனாக விரும்பினால் உண்மையான ஞானத்தை என்னுள்ளே வையும். ஈசோப்பு செடியால் என்னைத் தூய்மையாக்கும். பனியைக் காட்டிலும் நான் வெண்மையாகும் வரை என்னைக் கழுவும்!







