தேவன் செங்கடலை இரண்டாகப் பிளந்தார். அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும். தேவன் இஸ்ரவேலரைக் கடலின் வழியாக அழைத்துச் சென்றார். அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும். தேவன் செங்கடலில் பார்வோனையும் அவனது படையையும் அமிழ்த்தினார். அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும். தேவன் ஜனங்களை வனாந்தரத்தின் வழியாக நடத்திச் சென்றார். அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும். தேவன் வல்லமையுள்ள ராஜாக்களைத் தோற்கடித்தார். அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும். தேவன் பலமுள்ள ராஜாக்களைத் தோற்கடித்தார். அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும். தேவன் எமோரியரின் ராஜாவாகிய சீகோனைத் தோற்கடித்தார். அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும். தேவன் பாஷானின் ராஜாவாகிய ஓகைத் தோற்கடித்தார். அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும். தேவன் அவர்களது தேசத்தை இஸ்ரவேலருக்குக் கொடுத்தார். அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும். இஸ்ரவேலருக்குப் பரிசாக தேவன் அத்தேசத்தைக் கொடுத்தார். அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும். நாம் தோற்டிக்கப்பட்டபோது தேவன் நம்மை நினைவுக்கூர்ந்தார். அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும். தேவன் நமது பகைவர்களிடமிருந்து நம்மை விடுவித்தார். அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும். தேவன் ஒவ்வொருவருக்கும் உணவளிக்கிறார். அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும். பரலோகத்தின் தேவனைத் துதியுங்கள்! அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
வாசிக்கவும் சங்கீத புத்தகம் 136
பகிர்
அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக: சங்கீத புத்தகம் 136:13-26
வசனங்களைச் சேமிக்க, ஆஃப்லைனில் படிக்க, கற்பித்தல் கிளிப்களைப் பார்க்க மற்றும் பல!
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்