சங்கீத புத்தகம் 136:1-9
சங்கீத புத்தகம் 136:1-9 TAERV
கர்த்தர் நல்லவர், எனவே அவரைத் துதியுங்கள். அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும். தேவாதி தேவனைத் துதியங்கள்! அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும். கர்த்தாதி கர்த்தரைத் துதியுங்கள்! அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும். ஒருவராய் அற்புதமான அதிசயங்களைச் செய்கிறவராகிய தேவனைத் துதியங்கள்! அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும். வானங்களை உண்டாக்குவதற்கு ஞானத்தைப் பயன்படுத்திய தேவனைத் துதியங்கள்! அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும். தேவன் கடலின்மேல் உலர்ந்த தரையை உண்டாக்கினார். அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும். தேவன் பெரிய ஒளிகளை (சூரிய, சந்திர, நட்சத்திரங்களை) உண்டாக்கினார். அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும். தேவன் பகலை ஆளச் சூரியனை உண்டாக்கினார். அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும். தேவன் இரவை ஆளச் சந்திரனையும் நட்சத்திரங்களையும் உண்டாக்கினார். அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.

