சங்கீத புத்தகம் 116:1-7

சங்கீத புத்தகம் 116:1-7 TAERV

கர்த்தர் எனது ஜெபங்களைக் கேட்பதை நான் நேசிக்கிறேன். நான் உதவிக்காகக் கூப்பிடும்போது அவர் எனக்குச் செவிகொடுப்பதை நான் நேசிக்கிறேன். நான் மரித்தவன் போலானேன்! மரணக் கயிறுகள் என்னைச் சூழ்ந்துக்கொண்டன, கல்லறை என்னை மூடிற்று. நான் அஞ்சிக் கலங்கினேன். அப்போது நான் கர்த்தருடைய நாமத்தைக் கூப்பிட்டேன். நான்: “கர்த்தாவே, என்னைக் காப்பாற்றும்!” என்று கூறினேன். கர்த்தர் நல்லவரும், இரக்கம் நிறைந்தவருமாவார். தேவன் தயவுள்ளவர். கர்த்தர் திக்கற்ற ஜனங்களைக் கவனித்துக்கொள்கிறார். நான் உதவியற்றவனானேன், கர்த்தர் என்னைக் காப்பாற்றினார். என் ஆத்துமாவே, நீ இளைப்பாறு! கர்த்தர் உன்னைக் கவனித்துக்கொள்கிறார்.

சங்கீத புத்தகம் 116:1-7 க்கான வசனப் படம்

சங்கீத புத்தகம் 116:1-7 - கர்த்தர் எனது ஜெபங்களைக் கேட்பதை
நான் நேசிக்கிறேன்.
நான் உதவிக்காகக் கூப்பிடும்போது அவர் எனக்குச் செவிகொடுப்பதை
நான் நேசிக்கிறேன்.
நான் மரித்தவன் போலானேன்!
மரணக் கயிறுகள் என்னைச் சூழ்ந்துக்கொண்டன, கல்லறை என்னை மூடிற்று.
நான் அஞ்சிக் கலங்கினேன்.
அப்போது நான் கர்த்தருடைய நாமத்தைக் கூப்பிட்டேன்.
நான்: “கர்த்தாவே, என்னைக் காப்பாற்றும்!” என்று கூறினேன்.

கர்த்தர் நல்லவரும், இரக்கம் நிறைந்தவருமாவார்.
தேவன் தயவுள்ளவர்.
கர்த்தர் திக்கற்ற ஜனங்களைக் கவனித்துக்கொள்கிறார்.
நான் உதவியற்றவனானேன், கர்த்தர் என்னைக் காப்பாற்றினார்.
என் ஆத்துமாவே, நீ இளைப்பாறு!
கர்த்தர் உன்னைக் கவனித்துக்கொள்கிறார்.