பிலிப்பியருக்கு எழுதிய கடிதம் 2:14-26

பிலிப்பியருக்கு எழுதிய கடிதம் 2:14-26 TAERV

முறுமுறுப்பு அல்லது வாக்குவாதம், இல்லாமல் எல்லாவற்றையும் செய்யுங்கள். அப்போதுதான் எதுவுமறியாதவர்களாகவும், எந்தத் தவறும் இல்லாதவர்களாகவும் இருப்பீர்கள். நீங்கள் தேவனுடைய குற்றமற்ற பிள்ளைகளாக இருப்பீர்கள். ஆனால் உங்களைச் சுற்றிலும் உள்ள பாவம் செய்கிற கெட்டவர்களோடு நீங்கள் வாழ்கிறீர்கள். அவர்களுக்கு மத்தியில் இருட்டின் நடுவில் விளக்குபோன்று பிரகாசிக்கிறீர்கள். வாழ்வைக் கொடுக்கும் போதனையை அந்த மக்களுக்கும் நீங்கள் வழங்குங்கள். கிறிஸ்து மீண்டும் வரும்போது இது பற்றி நான் மிகவும் பெருமை அடைவேன். எனது பணி வீணாகவில்லை என்றும் நான் பெருமைகொள்வேன். ஏனென்றால் பந்தயத்தில் ஓடி நான் வென்றவனாவேன். தேவனுக்கு ஊழியம் செய்து உங்கள் வாழ்வைத் தியாகம் செய்ய உங்கள் விசுவாசம் தூண்டும். உங்கள் தியாகத்தோடு என் இரத்தத்தையும் தரத் தயாராக உள்ளேன். ஆனால் அது நடந்தேறினால் நான் முழுமையாக மகிழ்வேன். நான் உங்களோடு பெரிதும் மகிழ்ச்சி அடைவேன். மகிழ்ச்சியாக இருங்கள். என்னோடு முழு மகிழ்ச்சி அடையுங்கள். தீமோத்தேயுவை உங்களிடம் விரைவில் அனுப்ப நான் கர்த்தராகிய இயேசுவுக்குள் நம்புகிறேன். நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என்பதை அறிந்துகொள்வதில் நான் மகிழ்ச்சி அடைவேன். தீமோத்தேயுவைப் போன்று வேறு ஒருவரும் என்னிடம் இல்லை. உண்மையிலேயே அவன் உங்கள் மேல் அதிகக் கரிசனையுள்ளவன். மற்ற அனைவரும் தங்கள் சொந்த வாழ்க்கையில் மட்டும் ஆர்வமாக உள்ளனர். அவர்களுக்கு இயேசு கிறிஸ்துவுக்கு ஊழியம் செய்வதில் விருப்பம் இல்லை. தீமோத்தேயு எப்படிப்பட்டவன் என்பது உங்களுக்குத் தெரியும். நற்செய்தியைப் பரப்புவதில் அவன் என்னோடு பணி செய்திருக்கிறான் என்பது உங்களுக்குத் தெரியும். அவன் ஒரு குமாரன் தந்தைக்குத் தொண்டு செய்வது போன்று செய்தான். விரைவில் அவனை உங்களிடம் அனுப்பத் திட்டமிட்டுள்ளேன். எனக்கு என்ன நேரும் என்பதை அறிந்துகொள்ளும்போது நான் அவனை உங்களிடம் அனுப்பிவைப்பேன். உங்களிடம் நான் விரைவில் வர நமது கர்த்தர் உதவுவார் என்பதில் உறுதியாக இருக்கிறேன். எப்பாப்பிரோதீத்து கிறிஸ்துவுக்குள் என் சகோதரன், கிறிஸ்துவின் சேவையில் அவன் என்னோடு பணியாற்றி வருகிறான். எனக்கு உதவி தேவைப்பட்டபோது அவனை என்னிடம் அனுப்பினீர்கள். இப்போது அவனை உங்களிடம் அனுப்பி வைக்க வேண்டும் என எண்ணுகிறேன். உங்கள் அனைவரையும் பார்க்க அவன் விரும்புகிறான். அதனால் உங்களிடம் அவனை அனுப்பி வைக்க விரும்புகிறேன். அவன் நோயுற்றதை நீங்கள் கேள்விப்பட்டதால் சங்கடப்படுகிறான்.

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த பிலிப்பியருக்கு எழுதிய கடிதம் 2:14-26

சவாலான உலகில் இதயத்தைக் காத்தல் பிலிப்பியருக்கு எழுதிய கடிதம் 2:14-26 பரிசுத்த பைபிள்

சவாலான உலகில் இதயத்தைக் காத்தல்

3 நாட்களில்

கவனச்சிதறல்கள் மற்றும் சவால்கள் நிறைந்த உலகில், நோக்கமுள்ள மற்றும் உண்மையுள்ள கிறிஸ்தவ வாழ்க்கையை வாழ நம் இதயங்களைக் காப்பது அவசியம். பொதுவாக பயம், முறுமுறுத்தல், நண்பர்களின் அழுத்தம் மற்றும் ஏதோ ஒன்றில் மனநிறைவு இவற்றைத் தாண்டி வேதத்தில் வேரூன்றிய நடைமுறை பாடங்களை அறிய நம்மை ஆயத்தப்படுத்திக் கொள்ளவும். பொதுவாக விசுவாசிகள் வாழ்க்கையின் சோதனைகளை மேற்கொள்ளவும் வெற்றியுடன் வழிநடத்தவும், அவர்களின் நம்பிக்கையை வலுப்படுத்தவும், தேவனின் விருப்பத்துடன் அவர்களின் இதயங்களைச் சீரமைக்கவும் தேவன் வாஞ்சிக்கிறார். இதற்காக உதவும் நுண்ணறிவு மற்றும் செயல்படக்கூடிய படிகளை நாம் அறியவும் நன்றியுணர்வை வளர்ப்பதற்கும், உறுதியாக நிற்பதற்கும், அவருடைய மகிமைக்காக தொடர்ந்து நம்பிக்கையுடன் வாழ்வதற்கும் ஒன்றாகப் பயணிப்போம்.