ஒபதியா 1:1-4

ஒபதியா 1:1-4 TAERV

இது ஒபதியாவின் தரிசனம். என் கர்த்தராகிய ஆண்டவர் ஏதோம் நாட்டைப் பற்றி இதனைக் கூறுகிறார். நாங்கள் தேவனாகிய கர்த்தரிடமிருந்து ஒரு அறிக்கையைக் கேட்டோம். ஒரு தூதுவர் நாடுகளுக்கு அனுப்பப்பட்டார். அவர், “நாம் போய் ஏதோமுக்கு எதிராகச் சண்டையிடுவோம்” என்று கூறினார். “ஏதோமே, நான் உன்னை மிகவும் சிறிய நாடாக்குவேன். ஜனங்கள் உன்னை மிகவும் வெறுப்பார்கள். உன் பெருமை உன்னை ஏமாற்றிவிட்டது. கன்மலை உச்சியிலுள்ள குகைகளில் நீ வசிக்கிறாய். உன் வீடு மலைகளின் உச்சியில் உள்ளது. எனவே நீ உனக்குள்ளேயே, ‘எவராலும் என்னைத் தரைக்குக் கொண்டு வரமுடியாது’” என்கிறாய். தேவனாகிய கர்த்தர்: “நீ கழுகைப் போன்று உயரப்போனாலும் நட்சத்திரங்களுக்கிடையில் உன் கூட்டைக் கட்டினாலும், நான் அங்கிருந்து உன்னைக் கீழே கொண்டு வருவேன்” என்று கூறுகிறார்.

ஒபதியா 1:1-4 தொடர்பான இலவச வாசிப்புத் திட்டங்கள் மற்றும் தியானங்கள்

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்