மீகா 1:13-16

மீகா 1:13-16 TAERV

லாகீசில் குடியிருக்கிறவளே, உங்கள் இரதத்தில் விரைவாகச் செல்லும் குதிரையைப் பூட்டு. சீயோனின் பாவம் லாகீசில் தொடங்கியது. ஏனென்றால் நீ இஸ்ரவேலின் பாவங்களைப் பின்பற்றுகிறாய். எனவே, நீ மோர்ஷேக் காத்தினிடத்திற்கு கட்டாயமாக பிரிவு உபச்சார வெகுமதிகளைக் கொடுக்கவேண்டும். அக்சீபின் வீடுகள் இஸ்ரவேல் ராஜாக்களிடம் வஞ்சனை செய்யும். மரேஷாவில் குடியிருக்கிறவளே, நான் உனக்கு எதிராக ஒருவனைக் கொண்டு வருவேன். அவன் உனக்கு உரிய பொருட்களை எடுத்துக்கொள்வான். அதுல்லாமிற்குள் இஸ்ரவேலின் மகிமை (தேவன்) வரும். எனவே உனது முடியை வெட்டு, உன்னை மொட்டையாக்கிக்கொள். ஏனென்றால், நீ அன்பு செலுத்துகிற உன் குழந்தைகளுக்காக நீ கதறுவாய். நீ கழுகைப்போன்று முழுமொட்டையாக இருந்து உனது துக்கத்தைக் காட்டு. ஏனென்றால் உனது பிள்ளைகள் உன்னிடமிருந்து எடுத்துக்கொள்ளப்படுவார்கள்.