மத்தேயு எழுதிய சுவிசேஷம் 6:16-18

மத்தேயு எழுதிய சுவிசேஷம் 6:16-18 TAERV

“நீங்கள் உபவாசம் இருக்கும்பொழுது, சோகமாகக் காட்சியளிக்காதீர்கள். மாயக்காரர்கள் மட்டுமே அவ்வாறு செய்கிறார்கள். நீங்களும் அவர்களைப்போல நடிக்காதீர்கள். தாங்கள் உபவாசம் இருப்பதை மற்றவர்கள் காண்பதற்காகத் தங்கள் முகத்தை விநோதமாக வைத்துக்கொள்கிறார்கள். அவர்கள் தங்கள் முழு பலனை அடைந்துவிட்டார்கள். எனவே, நீங்கள் உபவாசம் இருக்கும்பொழுது, மகிழ்ச்சியாகக் காணப்படுங்கள். முகம் கழுவிக்கொள்ளுங்கள். எனவே, நீங்கள் உபவாசம் இருப்பது மற்றவர்களுக்குத் தெரியாது. ஆனால் நீங்கள் காண முடியாத உங்கள் பிதாவானவர் உங்களைக் காண்பார். உங்கள் பிதாவானவர் இரகசியமாகச் செய்யப்படும் செயல்களையும் காண வல்லவர். மேலும் அவர் உங்களுக்கு வெகுமதியளிப்பார்.

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த மத்தேயு எழுதிய சுவிசேஷம் 6:16-18

வருட இறுதியில் ஒரு மறு தொடக்கம் - உபவாச ஜெபம் மத்தேயு எழுதிய சுவிசேஷம் 6:16-18 பரிசுத்த பைபிள்

வருட இறுதியில் ஒரு மறு தொடக்கம் - உபவாச ஜெபம்

6 நாட்களில்

ஜெபம் மற்றும் உபவாசம் என்பது ஜெபத்தில் கவனம் செலுத்துவதற்கும், தேவனுடனான ஒருவரின் தொடர்பை ஆழப்படுத்துவதற்கும் தானாக முன்வந்து உணவைத் தவிர்ப்பதை வெளிப்படுத்துகிறது. அவை தனித்தனியாகவும் நிகழலாம், அவற்றின் கலவையானது செயல்திறனை அதிகரிக்கிறது. ஜெபத்திற்கும் உபவாசத்திற்கும் நேரம் ஒதுக்குவது என்பது தனிப்பட்ட ஆசைகளுக்காக தேவனை தேடுவதல்ல, மனத்தாழ்மையுடன் தேவ பலத்திற்காக ஞானத்திற்காக தன்னை மையப்படுத்தி அவரைச் சார்ந்திருப்பது மத்த எல்லாவற்றையும் தவிர்த்து தேவனை முக்கியப்படுத்தி ஈடுபடும் பொதுச் செயல். ஆன்மீக வளர்ச்சியையும் தேவ நம்பிக்கையும் ஆழப்படுத்திக் கொள்ள உபவாச ஜெபம் உதவி செய்கிறது.