ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகம் 48:12-20

ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகம் 48:12-20 TAERV

“யாக்கோபே, என்னைக் கவனி! இஸ்ரவேலர்களே, நான் எனது ஜனங்களாக உங்களை அழைத்தேன். எனவே என்னைக் கவனியுங்கள்! நானே தொடக்கம், நானே முடிவு! நான் பூமியை எனது சொந்தக் கையால் செய்தேன்! எனது வலது கை ஆகாயத்தைச் செய்தது! நான் அவற்றை அழைத்தால் என் முன்னால் அவை கூடி வரும். “நீங்கள் அனைவரும் இங்கே வாருங்கள். என்னைக் கவனியுங்கள். இவை நடக்குமென்று எந்தப் பொய்த் தெய்வங்களாவது கூறினார்களா? இல்லை! கர்த்தர் தெரிந்துகொண்ட விசேஷ மனிதன் எதை விரும்புகிறானோ அதைப் பாபிலோனுக்கும் கல்தேயருக்கும் செய்வான்.” கர்த்தர் சொல்கிறார், “நான் அவனை அழைப்பேன் என்று சொன்னேன். நான் அவனைக் கொண்டுவருவேன். நான் அவனை வெற்றியடையச் செய்வேன். இங்கே வா, என்னைக் கவனி! பாபிலோன் ஒரு தேசமாக ஆரம்பமாகும்போது நான் அங்கிருந்தேன். தொடக்கத்திலேயிருந்து நான் தெளிவாகப் பேசினேன். எனவே, நான் என்ன சொன்னேன் என்று ஜனங்களால் அறியமுடியும்.” பிறகு ஏசாயா சொன்னான், “இப்பொழுது, எனது கர்த்தராகிய ஆண்டவர் என்னையும் அவரது ஆவியையும் இவற்றை உங்களிடம் சொல்ல அனுப்பியிருக்கிறார். கர்த்தரும், மீட்பருமாகிய, இஸ்ரவேலின் பரிசுத்தர் சொல்கிறார், “‘நானே உனது தேவனாகிய கர்த்தர், பயனுள்ளதைச் செய்ய நான் உனக்குக் கற்பிக்கிறேன். நீ போக வேண்டிய பாதையில் உன்னை நான் வழி நடத்துகிறேன். நீ எனக்குக் கீழ்ப்படிந்திருந்தால், சமாதானம் பாய்ந்து வரும் ஆற்றைப்போன்று உன்னிடம் வந்திருக்கும். மீண்டும், மீண்டும் நன்மை கடல் அலைகள்போன்று, உன்னிடம் வந்திருக்கும், நீ எனக்குக் கீழ்ப்படிந்தால், உனக்கு நிறைய பிள்ளைகள் இருந்திருக்கும். அவர்கள் மணல் துகள்களைப்போன்று இருந்திருப்பார்கள். நீ எனக்குக் கீழ்ப்படிந்திருந்தால், நீ அழிக்கப்படாமல் இருந்திருப்பாய். என்னோடு நீ தொடர்ந்து இருந்திருப்பாய்.’ “எனது ஜனங்களே, பாபிலோனிலிருந்து புறப்படுங்கள்! எனது ஜனங்களே, கல்தேயரை விட்டு ஓடுங்கள்! ஜனங்களிடம் இந்தச் செய்தியை மகிழ்ச்சியோடு கூறுங்கள்! பூமியிலுள்ள தொலை தூர இடங்களிலும் இந்தச் செய்தியைப் பரப்புங்கள். ஜனங்களிடம் சொல்லுங்கள். ‘கர்த்தர் அவரது தாசனாகிய யாக்கோபை மீட்டார்!’

ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகம் 48:12-20 தொடர்பான இலவச வாசிப்புத் திட்டங்கள் மற்றும் தியானங்கள்

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்