அப்போஸ்தலருடைய நடபடிகள் 13:2-3

அப்போஸ்தலருடைய நடபடிகள் 13:2-3 TAERV

இம்மனிதர்கள் எல்லோரும் கர்த்தருக்கு சேவை செய்யவும் உபவாசமிருக்கவும் செய்தனர். பரிசுத்த ஆவியானவர் அவர்களை நோக்கி, “பர்னபாவையும் சவுலையும் எனக்காக ஒரு சிறப்பான வேலைக்காகத் தனித்து விடுங்கள். இந்த வேலையைச் செய்ய நான் அவர்களைத் தேர்ந்துள்ளேன்” என்றார். எனவே சபை உபவாசமிருந்து பிரார்த்தனை செய்தது. பர்னபாவின் மீதும் சவுலின் மீதும் தங்கள் கரங்களை வைத்து வெளியே அனுப்பினர்.

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த அப்போஸ்தலருடைய நடபடிகள் 13:2-3

வருட இறுதியில் ஒரு மறு தொடக்கம் - உபவாச ஜெபம் அப்போஸ்தலருடைய நடபடிகள் 13:2-3 பரிசுத்த பைபிள்

வருட இறுதியில் ஒரு மறு தொடக்கம் - உபவாச ஜெபம்

6 நாட்களில்

ஜெபம் மற்றும் உபவாசம் என்பது ஜெபத்தில் கவனம் செலுத்துவதற்கும், தேவனுடனான ஒருவரின் தொடர்பை ஆழப்படுத்துவதற்கும் தானாக முன்வந்து உணவைத் தவிர்ப்பதை வெளிப்படுத்துகிறது. அவை தனித்தனியாகவும் நிகழலாம், அவற்றின் கலவையானது செயல்திறனை அதிகரிக்கிறது. ஜெபத்திற்கும் உபவாசத்திற்கும் நேரம் ஒதுக்குவது என்பது தனிப்பட்ட ஆசைகளுக்காக தேவனை தேடுவதல்ல, மனத்தாழ்மையுடன் தேவ பலத்திற்காக ஞானத்திற்காக தன்னை மையப்படுத்தி அவரைச் சார்ந்திருப்பது மத்த எல்லாவற்றையும் தவிர்த்து தேவனை முக்கியப்படுத்தி ஈடுபடும் பொதுச் செயல். ஆன்மீக வளர்ச்சியையும் தேவ நம்பிக்கையும் ஆழப்படுத்திக் கொள்ள உபவாச ஜெபம் உதவி செய்கிறது.