Galatians 3:13

Galatians 3:13 BOOKS

Christ redeemed us from the curse of the law by becoming a curse for us, for it is written: “Cursed is everyone who is hung on a pole.”

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த Galatians 3:13

நம்மில் தேவனின் திட்டம் Galatians 3:13 The Books of the Bible NT

நம்மில் தேவனின் திட்டம்

5 நாட்களில்

நம்மில் தேவனின் திட்டம் என்பது நாம் இழந்து போன தேவனின் பிள்ளைகள் என்ற முழுமையான நிலையை மீண்டும் பெறுவதாகும். தேவனின் நோக்கத்தைப் புரிந்துகொள்வதற்கு, தேவன் நம்மை உருவாக்கும் போதே நமக்கு தந்தருளின இயல்பான வலிமைகள், திறமைகள் இவற்றை உரிமைப் படுத்தி விசுவாசத்தில் செயல்படுவதற்கு வழி காட்டுவது மட்டுமின்றி ஒவ்வொரு நாளும் தேவனின் பரிபூரண சித்தத்துடன் இணைந்து தேவனுடைய அழியாத வாக்குறுதிகளில் நம்பிக்கை உடையவர்களாக விசுவாசத்துடன் தொடர்ந்து வாழ கிருபை பெற்றுக்கொள்கிறோம். நமது சுதந்திரத்தை தவறாகப் பயன்படுத்தியதன் மூலம் நாம் ஆன்மீக உன்னத அந்தஸ்தை இழந்து விட்டோம். தேவன் நம் ஒவ்வொருவருக்காக திட்டம் பண்ணின வாழ்க்கையை நோக்கி நம்பிக்கையுடன் செல்லுவோம்.

குணமாக்கும் கிறிஸ்து Galatians 3:13 The Books of the Bible NT

குணமாக்கும் கிறிஸ்து

25 நாட்களில்

பரிசுத்த வேதாகமம் ஒரு மத புத்தகம் அல்ல. அது தேவனுடைய வார்த்தை. வேதாகமத்தில், ஆசீர்வாதம் மற்றும் சாபங்கள் என இரண்டு முக்கியமான சக்திகளைக் குறித்து நீங்கள் நிறைய பார்க்கலாம். இதில், ஆசீர்வாதம் முற்போக்கான சக்தியாகவும், சாபங்கள் பிற்போக்கான சக்தியாகவும் இருக்கிறது. இந்த இரண்டு சக்திகளும் நம்முடைய வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு மிகவும் வல்லமையானவை என்று வேதம் போதிக்கிறது. வாழ்க்கையில் ஆசீர்வாதம் வேண்டும் என்று எல்லோரும் விரும்பினாலும், சாபம் போன்ற சூழ்நிலைகள் அவர்களுடைய வாழ்க்கையில் காணப்பட்டு, தேவன் அவர்களுக்கு வைத்திருக்கிற சிறந்த காரியங்களை அவர்கள் பெற்று அனுபவிக்க முடியாதபடி அவைகளைக் களவாடுவதைக் கண்டு உள்ளம் வேதனைப்படுகிறது. வேதாகமம், இந்த இரண்டு சக்திகளைக் குறித்த சில உண்மைகளைக் கூறுவது மட்டுமல்ல, எவ்வாறு சாபத்திலிருந்து விடுதலையாகி ஆசிர்வாதத்தில் வாழ்வது என்பதைக் குறித்தும் போதிக்கிறது.