சங்கீதம் 19:1-9

சங்கீதம் 19:1-9 TCV

வானங்கள் இறைவனுடைய மகிமையை அறிவிக்கின்றன, ஆகாயங்கள் அவருடைய கரங்களின் செயலைப் பிரசித்தப்படுத்துகின்றன. அவைகள் நாள்தோறும் பேசுகின்றன; இரவுதோறும் அறிவை வெளிப்படுத்துகின்றன. அவைகள் சொற்கள் இல்லாமல் பேசுகின்றன; அங்கே அவைகளின் சத்தம் கேட்கப்படுவதுமில்லை. ஆனாலும் அவைகளின் குரல் பூமியெங்கும் செல்கிறது; அவைகளின் வார்த்தைகள் உலகத்தின் கடைமுனை வரைக்கும் செல்கின்றன. யெகோவா வானங்களில் சூரியனுக்கு ஒரு கூடாரத்தை அமைத்திருக்கிறார். சூரியனோ, மணவறையிலிருந்து புறப்படும் ஒரு மணமகனைப் போலவும், பந்தயத்திற்காக ஓட மகிழ்ச்சியுடனிருக்கும் விளையாட்டு வீரனைப்போலவும் இருக்கிறது. அது வானங்களின் ஒரு முனையில் உதித்து, மறுமுனைவரை சுற்றிவருகிறது. அதின் வெப்பத்திற்குத் ஒன்றும் தப்புவதில்லை. யெகோவாவினுடைய சட்டம் முழு நிறைவானது, அது ஆத்துமாவுக்குப் புத்துயிரளிக்கிறது. யெகோவாவினுடைய நியமங்கள் நம்பகமானவை, அவை பேதையை ஞானியாக்குகின்றன. யெகோவாவினுடைய ஒழுங்குவிதிகள் நியாயமானவை, அவை இருதயத்திற்கு மகிழ்வைக் கொடுக்கின்றன. யெகோவாவினுடைய கட்டளைகள் பிரகாசமானவை, அவை கண்களுக்கு வெளிச்சத்தைக் கொடுக்கின்றன. யெகோவாவுக்குரிய பயபக்தி தூய்மையானது, அது என்றென்றும் நிலைத்திருக்கிறது. யெகோவாவினுடைய விதிமுறைகள் நிலையானவை, அவை முற்றிலும் நீதியானவை.

சங்கீதம் 19:1-9 க்கான வசனப் படங்கள்

சங்கீதம் 19:1-9 - வானங்கள் இறைவனுடைய மகிமையை அறிவிக்கின்றன,
ஆகாயங்கள் அவருடைய கரங்களின் செயலைப் பிரசித்தப்படுத்துகின்றன.
அவைகள் நாள்தோறும் பேசுகின்றன;
இரவுதோறும் அறிவை வெளிப்படுத்துகின்றன.
அவைகள் சொற்கள் இல்லாமல் பேசுகின்றன;
அங்கே அவைகளின் சத்தம் கேட்கப்படுவதுமில்லை.
ஆனாலும் அவைகளின் குரல் பூமியெங்கும் செல்கிறது;
அவைகளின் வார்த்தைகள் உலகத்தின் கடைமுனை வரைக்கும் செல்கின்றன.
யெகோவா வானங்களில் சூரியனுக்கு ஒரு கூடாரத்தை அமைத்திருக்கிறார்.
சூரியனோ, மணவறையிலிருந்து புறப்படும் ஒரு மணமகனைப் போலவும்,
பந்தயத்திற்காக ஓட மகிழ்ச்சியுடனிருக்கும் விளையாட்டு வீரனைப்போலவும் இருக்கிறது.
அது வானங்களின் ஒரு முனையில் உதித்து,
மறுமுனைவரை சுற்றிவருகிறது.
அதின் வெப்பத்திற்குத் ஒன்றும் தப்புவதில்லை.

யெகோவாவினுடைய சட்டம் முழு நிறைவானது,
அது ஆத்துமாவுக்குப் புத்துயிரளிக்கிறது.
யெகோவாவினுடைய நியமங்கள் நம்பகமானவை,
அவை பேதையை ஞானியாக்குகின்றன.
யெகோவாவினுடைய ஒழுங்குவிதிகள் நியாயமானவை,
அவை இருதயத்திற்கு மகிழ்வைக் கொடுக்கின்றன.
யெகோவாவினுடைய கட்டளைகள் பிரகாசமானவை,
அவை கண்களுக்கு வெளிச்சத்தைக் கொடுக்கின்றன.
யெகோவாவுக்குரிய பயபக்தி தூய்மையானது,
அது என்றென்றும் நிலைத்திருக்கிறது.
யெகோவாவினுடைய விதிமுறைகள் நிலையானவை,
அவை முற்றிலும் நீதியானவை.சங்கீதம் 19:1-9 - வானங்கள் இறைவனுடைய மகிமையை அறிவிக்கின்றன,

அவை முற்றிலும் நீதியானவை.

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த சங்கீதம் 19:1-9

சங்கீதங்களில் நம்பிக்கையைக் கண்டறிதல் சங்கீதம் 19:1-9 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

சங்கீதங்களில் நம்பிக்கையைக் கண்டறிதல்

5 நாட்களில்

நமது அனுதின மன்னாவிலிருந்து பிரத்தியேகமாக தெரிவுசெய்யப்பட்ட இந்த 5 வாசிப்புகளிலிருந்து சங்கீதங்களின் நேர்மையான, மூல அதாவது மாற்றப்படாத, மற்றும் இதயபூர்வமான அழுகையின் பயணம் இது. தேவனுடனான உங்கள் சொந்த உரையாடலை ஆழமாக்கவும், அவர்பேரில் தங்கள் விசுவாசத்தை வைப்பவர்களுக்கு அவர் தருகின்ற நம்பிக்கையைக் கண்டுகொள்ளவும், திரும்பவும் திரும்பவும் தெளிவாகச் சித்தரிக்கப்பட்டுள்ள இயேசுவின் அன்பு, மீட்பு மற்றும் முன் ஏற்பாடுகளையும் கண்டுகொள்ளவும் இந்த சங்கீதக்காரர்களின் வார்த்தைகளைப் யன்படுத்திகொள்ளுங்கள். தமது ஒவ்வொரு வாக்குத்தத்தத்தையும், நமது ஒவ்வொரு தேவையையும் நிறைவேற்றுகின்ற இரட்சகரின் நிமித்தம், பாதுகாப்பும், மனநிறைவும் மற்றும் மகிழ்ச்சியும் நிறைந்த வாழ்வை வாழுவதற்கு இந்த சங்கீதக்காரர்கள் உங்களுக்கு ஊக்கமளிக்கட்டும்.