சங்கீதம் 143

143
சங்கீதம் 143
தாவீதின் சங்கீதம்.
1யெகோவாவே, என் மன்றாட்டைக் கேளும்,
இரக்கத்திற்கான என் கதறுதலுக்குச் செவிகொடும்;
உமது உண்மையின்படியும்
நீதியின்படியும் எனக்கு பதில் தாரும்.
2உமது அடியானை நியாயந்தீர்க்காதேயும்.
வாழ்கின்ற ஒருவருமே உமக்கு முன்பாக நீதிமான்கள் இல்லையே.
3பகைவன் என்னைப் பின்தொடர்கிறான்,
அவன் என்னை தரையில் போட்டு தாக்குகிறான்;
வெகுகாலத்திற்கு முன்பு இறந்தவர்களைப்போல்,
அவன் என்னை இருளில் குடியிருக்கப்பண்ணுகிறான்.
4ஆகவே எல்லா நம்பிக்கையையும் இழந்து என் ஆவி எனக்குள் சோர்ந்துபோகிறது;
பயத்தால் என் இருதயம் கலங்குகிறது.
5நான் முந்தின நாட்களை நினைக்கிறேன்;
உமது செயல்களையெல்லாம் தியானிக்கிறேன்;
உமது கரத்தின் செயல்களை யோசிக்கிறேன்.
6நான் உம்மை நோக்கி என் கைகளை விரிக்கிறேன்;
வறண்ட நிலத்தைப்போல் என் ஆத்துமா உம்மேல் தாகம் கொண்டிருக்கிறது.
7யெகோவாவே, சீக்கிரமாய் எனக்குப் பதில் தாரும்;
என் உள்ளம் சோர்ந்துபோகிறது;
உமது முகத்தை என்னிடமிருந்து மறையாதேயும்; இல்லாவிட்டால்,
நான் மரணக் குழியில் இறங்குகிறவர்களைப் போலாகிவிடுவேன்.
8காலை வேளையானது உமது உடன்படிக்கையின் அன்பின் செய்தியைக் கொண்டுவரட்டும்,
ஏனெனில் நான் என் நம்பிக்கையை உம்மிலேயே வைத்திருக்கிறேன்;
நான் போகவேண்டிய வழியை எனக்குக் காண்பியும்,
ஏனெனில் என் உயிரை உம்மிடத்தில் ஒப்படைக்கிறேன்.
9யெகோவாவே, என் பகைவரிடமிருந்து என்னைத் தப்புவியும்;
ஏனெனில் நான் உமக்குள் என்னை மறைத்துக்கொள்கிறேன்.
10நீரே என் இறைவன்;
ஆதலால் உமது சித்தத்தைச் செய்ய எனக்குப் போதியும்;
உமது நல்ல ஆவியானவர்
என்னை நல்வழியில் நடத்துவாராக.
11யெகோவாவே, உமது பெயரின் மகிமைக்காக என் வாழ்வைக் காத்துக்கொள்ளும்;
உமது நியாயத்தினிமித்தம் வேதனையிலிருந்து என்னை விடுவியும்.
12உமது உடன்படிக்கையின் அன்பினிமித்தம் என் பகைவரை அழித்துவிடும்;
என் எதிரிகள் அனைவரையும் ஒழித்துவிடும்;
ஏனெனில் நான் உமது அடியவன்.

தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:

சங்கீதம் 143: TCV

சிறப்புக்கூறு

பகிர்

நகல்

None

உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்