மத்தேயு 14:23-27

மத்தேயு 14:23-27 TCV

அவர்களை அனுப்பிவிட்ட பின்பு, இயேசு தனிமையாக மன்றாடுவதற்கென மலையின்மேல் ஏறினார். இரவு வேளையானபோது, அவர் அங்கே தனிமையாய் இருந்தார். ஆனால் சீடர்கள் சென்ற படகு, கரையை விட்டு மிகத் தொலைவில் போயிருந்தது. எதிர்க்காற்று வீசியதால் படகு அலைக்கழிக்கப்பட்டது. அதிகாலை மூன்றாம்மணி நேரத்தில், இயேசு கடலின்மேல் நடந்து அவர்களிடம் சென்றார். அவர் கடலின்மேல் நடப்பதை சீடர்கள் கண்டபோது, திகிலடைந்து, “அது பேய்!” என்று சொல்லி, பயத்துடன் சத்தமிட்டார்கள். உடனே இயேசு அவர்களிடம்: “தைரியமாய் இருங்கள்! இது நான்தான், பயப்படவேண்டாம்” என்றார்.

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த மத்தேயு 14:23-27

தேவனின் நோக்கத்தையே முன் வைத்து வாழும் ஒரு வாழ்வு மத்தேயு 14:23-27 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

தேவனின் நோக்கத்தையே முன் வைத்து வாழும் ஒரு வாழ்வு

4 நாட்களில்

தேவனின் நோக்கத்தை முன்பாக வைத்து வாழ விரும்பும் நம் வாழ்வில் நமக்கு நம் நம்பிக்கையை சோதிக்கும், பயத்தை தூண்டி, குற்ற உணர்ச்சியாலும் வருத்தத்தாலும் நம்மைச் சுமையாக்கும் சவால்களை வாழ்க்கை அடிக்கடி கொண்டுவருகிறது. ஆனாலும், நம்முடைய விசுவாசம் என்பது தேவனின் நோக்கமும் கிருபையும் நமக்கு துணையாக நின்று ஜெயிப்பதற்கான பலத்தை நமக்கு அளிக்கிறது. சந்தேகங்களை எதிர்கொள்வதற்கும், அச்சங்களை வெல்வதற்கும், மன்னிப்பை ஏற்றுக்கொள்வதற்கும், வருத்தத்தை அறிக்கை செய்வதற்கும் இந்த வேதாகமப் பாடங்களையும் நடைமுறைப் படிகளையும் ஆராய உங்களை அழைக்கிறது. தேவனின் வாக்குறுதிகளை நம்பி, அவருடைய கிருபையில் நம்பிக்கையுடன் நடக்க, தைரியமாக வாழ இந்தப் பிரதிபலிப்புகள் உங்களைத் தூண்டட்டும்.