லேவியராகமம் 20:1-5

லேவியராகமம் 20:1-5 TCV

யெகோவா மோசேயிடம், “மேலும் நீ இஸ்ரயேல் மக்களுக்கு சொல்லவேண்டியதாவது, ‘இஸ்ரயேலனாவது, இஸ்ரயேலில் வாழும் பிறநாட்டினனாவது, தங்கள் பிள்ளைகளை மோளேக்கு தெய்வத்திற்குக் கொடுத்தால், அவன் கொல்லப்படவேண்டும். மக்கள் சமுதாயம் அவனைக் கல்லெறிந்து கொல்லவேண்டும். நான் என் முகத்தை அவனுக்கு விரோதமாக்கி, அவனுடைய மக்களிலிருந்து அவனை அகற்றுவேன். ஏனெனில், தன் பிள்ளைகளை மோளேக்கு தெய்வத்திற்குக் கொடுத்ததினால் அவன் என் பரிசுத்த இடத்தை அசுத்தப்படுத்தி, என் பரிசுத்த பெயரையும் இழிவுபடுத்தினான். அவன் தன் பிள்ளைகளில் ஒன்றை மோளேக்கு தெய்வத்திற்குக் கொடுக்கிறபோது மக்கள் சமுதாயம் அவனைக் கொலைசெய்யத் தவறி, தங்கள் கண்களை மூடிக்கொண்டால், நான் என் முகத்தை அவனுக்கு விரோதமாகவும், அவன் குடும்பத்திற்கு விரோதமாகவும் திருப்புவேன். நான் அவனையும், எனக்கெதிராக மோளேக்கு தெய்வத்திடம் வேசித்தனத்திற்குத் தங்களை ஒப்புக்கொடுத்த, அவனைப் பின்பற்றுகிற யாவரையும் அவர்களுடைய மக்களிலிருந்து அகற்றுவேன்.