யோயேல் 2:28-30

யோயேல் 2:28-30 TCV

“அதன்பின்பு, நான் எல்லா மக்கள்மேலும் என் ஆவியானவரைப் பொழிவேன். உங்கள் மகன்களும், மகள்களும் இறைவாக்கு உரைப்பார்கள்; உங்கள் முதியவர்கள் கனவுகளையும் உங்கள் இளைஞர் தரிசனங்களையும் காண்பார்கள். மேலும் அந்நாட்களில் நான், எனது ஊழியக்காரர்கள்மேலும் ஊழியக்காரிகள்மேலும் என் ஆவியைப் பொழிவேன். வானத்திலும் பூமியிலும் இரத்தமும் நெருப்பும் புகை மண்டலமுமாகிய அதிசயங்களை நான் காண்பிப்பேன்.

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த யோயேல் 2:28-30

பரிசுத்த ஆவியின் மூலமாக ஆன்மீக விழிப்புணர்வு யோயேல் 2:28-30 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

பரிசுத்த ஆவியின் மூலமாக ஆன்மீக விழிப்புணர்வு

3 நாட்களில்

பரிசுத்த ஆவியின் மூலமாக நமது சாதாரண எண்ணங்கள் புதுவிதமான மாற்றங்களை பெறுகிறது. முதலாவதாக நம் இதயங்களை பாதுகாக்கிறது மேலும் நமது கனவுகள் மற்றும் தரிசனங்கள் தெய்வீக வழிகாட்டுதலை வெளிப்படுத்துகிறது. ஆவியானவருடன் இணைந்து செயல்பட நம்மை ஒப்படைப்பது மூலம், நம் இயல்பான உணர்வற்ற மனதின் வல்லமையை பயன்படுத்தி, தடைபட்டிருந்த ஆவிக்குரிய வளர்ச்சியை அடைய அதற்கு எதிரான வளர்ச்சித் தடைகளைத் தாண்டி, நம் வாழ்வில் தேவனின் மறுரூபப்படுத்தும் அனுபவங்களை அனுபவிக்க இயலும். இந்த ஆவிக்குரிய அனுபவங்கள் நம்மை நாமே ஆழமாகப் புரிந்துகொள்ளவும், தேவனின் நோக்கங்களை வெளிப்படுத்தவும், நம்பிக்கை, தெளிவு மற்றும் ஆன்மீக வெற்றியுடன் வாழும் உன்னத அதிகாரம் அளிக்கிறது.