பிரசங்கி 3:1-11

பிரசங்கி 3:1-11 TCV

எல்லாவற்றிற்கும் ஒரு காலமுண்டு, வானத்தின் கீழே ஒவ்வொரு செயலுக்கும் அதற்குரிய காலமுண்டு. பிறப்பதற்கு ஒரு காலமுண்டு, இறப்பதற்கு ஒரு காலமுண்டு; நடுவதற்கு ஒரு காலமுண்டு, பிடுங்குவதற்கு ஒரு காலமுண்டு; கொல்வதற்கு ஒரு காலமுண்டு, சுகப்படுத்துவதற்கு ஒரு காலமுண்டு; இடித்து வீழ்த்த ஒரு காலமுண்டு, கட்டி எழுப்ப ஒரு காலமுண்டு; அழுவதற்கு ஒரு காலமுண்டு, சிரிப்பதற்கு ஒரு காலமுண்டு; துக்கங்கொண்டாட ஒரு காலமுண்டு, நடனம் ஆட ஒரு காலமுண்டு; கற்களை எறிந்துவிட ஒரு காலமுண்டு, கற்களை ஒன்றுசேர்க்க ஒரு காலமுண்டு; அணைத்துக்கொள்ள ஒரு காலமுண்டு, அணைத்துக் கொள்ளாதிருக்க ஒரு காலமுண்டு. தேடிச் சேர்க்க ஒரு காலமுண்டு, விட்டுவிட ஒரு காலமுண்டு; வைத்திருக்க ஒரு காலமுண்டு, எறிந்துவிட ஒரு காலமுண்டு; கிழித்துப் பிரிக்க ஒரு காலமுண்டு, தைத்து ஒன்றுசேர்க்க ஒரு காலமுண்டு; பேசாமல் இருக்க ஒரு காலமுண்டு, பேச ஒரு காலமுண்டு; அன்பாயிருக்க ஒரு காலமுண்டு, பகைக்க ஒரு காலமுண்டு; யுத்தம் பண்ண ஒரு காலமுண்டு; சமாதானமாயிருக்க ஒரு காலமுண்டு. வேலையாள் தன் உழைப்பினால் பெறும் இலாபம் என்ன? இறைவன், மனிதன்மேல் வைத்திருக்கும் பாரத்தை நான் பார்த்திருக்கிறேன். அவர் எல்லாவற்றையும் அதினதின் காலத்தில் அழகாய் செய்திருக்கிறார். மனிதருடைய இருதயங்களில் அவர் நித்திய காலத்தின் உணர்வையும் வைத்திருக்கிறார். ஆனால் இறைவன் ஆரம்பம் முதல் இறுதிவரை செய்திருப்பதை அவர்களால் அளவிடமுடியாது.

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த பிரசங்கி 3:1-11

மனஅழுத்தம் பிரசங்கி 3:1-11 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

மனஅழுத்தம்

9 நாட்களில்

வாழ்க்கை என்பது ஒவ்வொரு நபரும் கிட்டத்தட்ட சகிப்புத்தன்மையுடனும் விடாமுயற்சியுடனும் போராடி மேற்கொள்ளும் ஒரு பந்தயமாகும். சில சமயங்களில், குடும்பம், திருமணம், வேலை, போன்றவற்றிற்கு நாம் ஆற்ற வேண்டிய சகலவித கடமைகளாலும் நாம் நெருக்கப்பட்டு, மிகுந்த மன அழுத்தத்தில் இருக்கிறோம். நம்மையும் அறியாமல், போட்டியிட்டு வெற்றி பெற செயல்பட வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்படுகிறோம், அதனால் ஆண்டவர் நமக்குக் கொடுத்திருக்கும் சமாதானத்தையும் சந்தோஷத்தையும் நாம் இழக்க நேரிடலாம். இந்தத் திட்டத்தில், இப்படிப்பட்ட நெருக்கடிகளை மேற்கொண்டு, ஆண்டவர் நமக்குக் கொடுக்கும் சமாதானம் மற்றும் சந்தோஷத்தால் நிரப்பப்படுவது எப்படி என்பதை நாம் காண்போம்.