தானியேல் 6:25-28
தானியேல் 6:25-28 TCV
அப்பொழுது தரியு அரசன், எல்லா மக்களுக்கும், நாடுகளுக்கும், பல்வேறு நாடெங்கும் மொழிகளைப் பேசுபவர்களுக்கும் எழுதுகிறதாவது: “நீங்கள் மிகச் செழிப்புடன் வாழ்வீர்களாக. “எனது ஆட்சிக்குட்பட்டிருக்கும் எல்லா பகுதிகளிலுமுள்ள மக்கள் தானியேலின் இறைவனுக்குப் பயந்து அவரையே கனப்படுத்தவேண்டும். “ஏனெனில் வாழும் இறைவன் அவரே. அவர் என்றென்றும் நிலைத்திருக்கிறார். அவருடைய அரசு அழிந்துபோகாது. அவரது ஆளுகை முடிவில்லாதது. அவர் தப்புவிக்கிறார், அவர் காப்பாற்றுகிறார். அவரே வானத்திலும் பூமியிலும், அடையாளங்களையும் அதிசயங்களையும் செய்கிறார். அவரே வலிமைமிக்க சிங்கங்களிடமிருந்து தானியேலைத் தப்புவித்தார்.” இவ்வாறு தானியேல், தரியுவின் ஆட்சிக்காலத்திலும், பெர்சியனாகிய கோரேஸின் ஆட்சிக்காலத்திலும் செழிப்புடன் வாழ்ந்தான்.


