1 நாளாகமம் 1

1
ஆதாமிலிருந்து ஆபிரகாம்வரை
நோவாவின் மகன்கள்
1ஆதாம், சேத், ஏனோஸ்,
2கேனான், மகலாலெயேல், யாரேத்,
3ஏனோக்கு, மெத்தூசலா, லாமேக்கு,
நோவா ஆகியோர்.
4நோவாவின் மகன்கள்: சேம், காம், யாப்பேத்.
யாபேத்தியர்கள்
5யாப்பேத்தின் மகன்கள்:
கோமர், மாகோகு, மாதாய், யாவான், தூபால், மேசேக்கு, தீராஸ்.
6கோமரின் மகன்கள்:
அஸ்கினாஸ், ரீப்பாத்து, தொகர்மா.
7யாவானின் மகன்கள்:
எலீஷா, தர்ஷீஸ், கித்தீம், ரொதானீம்.
காமியர்கள்
8காமின் மகன்கள்:
கூஷ், மிஸ்ராயீம், பூத், கானான்.
9கூஷின் மகன்கள்:
சேபா, ஆவிலா, சப்தா, ராமா, சப்திகா என்பவர்கள்.
ராமாவின் மகன்கள்:
சேபா, திதான்.
10கூஷின் மகன் நிம்ரோத்;
இவன் பூமியில் வலிமையுள்ள வீரனாக விளங்கினான்.
11மிஸ்ராயீமின் சந்ததிகள்:
லூதீமியர், ஆனாமியர், லெகாபியர், நப்தூகியர், 12பத்ரூசீயர், பெலிஸ்தியரின் சந்ததிக்கு தலைவனான கஸ்லூகியர், கப்தோரியர்.
13கானானின் சந்ததிகள்:
மூத்த மகன் சீதோன், கேத்து, 14எபூசியர், எமோரியர், கிர்காசியர், 15ஏவியர், அர்கீயர், சீனியர், 16அர்வாதியர், செமாரியர், காமாத்தியர்.
சேமியர்கள்
17சேமின் மகன்கள்:
ஏலாம், அசூர், அர்பக்சாத், லூத், ஆராம்.
ஆராமின் மகன்கள்:
ஊத்ஸ், கூல், கேத்தெர், மேசேக்கு.
18அர்பக்சாத் சேலாவின் தகப்பன், சேலா
ஏபேரின் தகப்பன்.
19ஏபேருக்கு இரண்டு மகன்கள் பிறந்தார்கள். ஒருவன் பெயர் பேலேகு,#1:19 பேலேகு என்றால் எபிரெயத்தில் பிரித்தல் என்று பொருள்.
ஏனெனில் அவன் காலத்தில் பூமியிலுள்ள மக்கள் வெவ்வேறு மொழி குழுக்களாக பிரிக்கப்பட்டனர். அவனுடைய சகோதரன் பெயர் யொக்தான்.
20யொக்தான் என்பவன் அல்மோதாத், செலேப்,
அசர்மாவேத், யேராகு, 21அதோராம், ஊசால், திக்லா, 22ஏபால், அபிமாயேல், சேபா, 23ஓப்பீர், ஆவிலா, யோபாப் ஆகியோரின் தகப்பன். இவர்களே யொக்தானின் மகன்கள்.
24சேம், அர்பக்சாத், சேலா;
25ஏபேர், பேலேகு, ரெகூ,
26செரூகு, நாகோர், தேராகு,
27ஆபிராமாகிய ஆபிரகாம்.
ஆபிரகாமின் குடும்பம்
28ஆபிரகாமின் மகன்கள்: ஈசாக்கு, இஸ்மயேல் என்பவர்கள்.
ஆகாரின் சந்ததி
29அவர்களின் சந்ததிகள் இதுவே:
நெபாயோத் இஸ்மயேலின் மூத்த மகன், பின்பு கேதார், அத்பியேல், மிப்சாம்; 30மிஷ்மா, தூமா, மாசா, ஆதாத், தேமா, 31யெத்தூர், நாபீஸ், கேத்மா என்பவர்கள்.
இவர்கள் இஸ்மயேலின் மகன்கள்.
கேத்தூராளின் சந்ததி
32ஆபிரகாமின் மறுமனையாட்டி கேத்தூராள் பெற்ற மகன்கள்:
சிம்ரான், யக்க்ஷான், மேதான், மீதியான், இஸ்பாக், சூவா.
யக்க்ஷானின் மகன்கள்:
சேபா, தேதான்.
33மீதியானின் மகன்கள்:
ஏப்பா, ஏப்பேர், ஆனோக்கு, அபிதா, எல்தாகா.
இவர்கள் அனைவரும் கேத்தூராளின் சந்ததிகள்.
சாராளின் சந்ததி
34ஆபிரகாம் ஈசாக்கின் தகப்பன்,
ஈசாக்கின் மகன்கள்:
ஏசா, இஸ்ரயேல்.
ஈசாக்கின் மகன்கள்
35ஏசாவின் மகன்கள்:
எலிப்பாஸ், ரெகுயேல், எயூஷ், யாலாம், கோராகு.
36எலிப்பாஸின் மகன்கள்:
தேமான், ஓமார், செப்போ, கத்தாம், கேனாஸ்;
திம்னா என்பவளுக்கு அமலேக்கு பிறந்தான்.
37ரெகுயேலின் மகன்கள்:
நாகாத், செராகு, சம்மா, மீசா.
ஏதோமில் சேயீரின் மக்கள்
38சேயீரின் மகன்கள்:
லோத்தான், சோபால், சிபியோன், ஆனாகு, திஷோன், ஏசேர், திஷான்.
39லோத்தானின் மகன்கள்:
ஓரி, ஓமாம் என்பவர்கள். திம்னாள் லோத்தானின் சகோதரி.
40சோபாலின் மகன்கள்:
அல்வான், மானகாத், ஏபால், செப்பி, ஓனாம்.
சிபியோனின் மகன்கள்:
அயா, ஆனாகு.
41ஆனாகின் மகன்:
திஷோன்.
திஷோனுடைய மகன்கள்:
எம்தான், எஸ்பான், இத்ரான், கெரான்.
42ஏசேருடைய மகன்கள்:
பில்கான், சகவான், யாக்கான்.
திஷானுடைய மகன்கள்:
ஊத்ஸ், அரான்.
ஏதோமின் ஆளுநர்கள்
43இஸ்ரயேல் மக்களை ஒரு அரசர் ஆட்சி செய்யுமுன், ஏதோம் நாட்டில் அரசாண்ட அரசர்கள்:
பேயோரின் மகன் பேலா; அவனுடைய பட்டணம் தின்காபா எனப் பெயரிடப்பட்டது.
44பேலா இறந்தபின்பு போஸ்றாவைச் சேர்ந்த சேராகின் மகன் யோபாப் அவனுக்குப்பின் அரசனானான்.
45யோபாப் இறந்தபின்பு அவனுடைய இடத்தில் தேமான் நாட்டைச் சேர்ந்த உஷாம் அரசனானான்.
46உஷாம் இறந்தபின்பு, மோவாப் நாட்டிலே மீதியானியரை முறியடித்த பேதாதின் மகன் ஆதாத் அவனுடைய இடத்தில் அரசனானான். இவனுடைய பட்டணம் ஆவீத் எனப் பெயரிடப்பட்டது.
47ஆதாத் இறந்தபின்பு அவனுடைய இடத்தில் மஸ்ரேக்கா என்னும் இடத்தைச் சேர்ந்த சம்லா அரசனானான்.
48சம்லா இறந்தபின்பு, ஆற்றின் அருகில் உள்ள ரெகொபோத் என்னுமிடத்தைச் சேர்ந்த சாவூல் அவனுடைய இடத்தில் அரசனானான்.
49சாவூல் இறந்தபின்பு அவனுடைய இடத்தில் அக்போரின் மகன் பாகால்கானான் அரசனானான்.
50பாகால்கானான் இறந்தபின்பு, அவனுடைய இடத்தில் ஆதாத் அரசனானான். இவனது பட்டணம் பாகு எனப் பெயரிடப்பட்டது. இவனது மனைவியின் பெயர் மெகேதபேல்; இவள் மத்ரேத்தின் மகளும் மேசகாபின் பேத்தியுமாவாள். 51ஆதாத்தும் இறந்தான்.
ஏதோமின் பிரதானமானவர்கள்:
திம்னா, அல்வா, ஏதேத், 52அகோலிபாமா, ஏலா, பினோன், 53கேனாஸ், தேமான், மிப்சார், 54மக்தியேல், ஈராம்.
இவர்களே ஏதோமின் வம்சத்தலைவர்கள்.

தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:

1 நாளாகமம் 1: TCV

சிறப்புக்கூறு

பகிர்

நகல்

None

உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்