சங் 19:1-9

சங் 19:1-9 IRVTAM

வானங்கள் தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துகின்றன, ஆகாய விரிவு அவருடைய கைகளின் செயல்களை அறிவிக்கிறது. பகலுக்குப் பகல் வார்த்தைகளைப் பொழிகிறது, இரவுக்கு இரவு அறிவைத் தெரிவிக்கிறது. அவைகளுக்குப் பேச்சுமில்லை, வார்த்தையுமில்லை, அவைகளின் சத்தம் கேட்கப்படுவதுமில்லை. ஆகிலும் அவைகளின் சத்தம் பூமியெங்கும், அவைகளின் வசனங்கள் உலகின் கடைசிவரைக்கும் செல்லுகின்றன; அவைகளில் சூரியனுக்கு ஒரு கூடாரத்தை உண்டாக்கினார். அது தன்னுடைய மணவறையிலிருந்து புறப்படுகிற மணவாளனைப்போல் இருக்கிறது, பெலசாலியைப்போல் தன்னுடைய பாதையில் ஓட மகிழ்ச்சியாக இருக்கிறது. அது வானங்களின் ஒரு முனையிலிருந்து புறப்பட்டு, அவைகளின் மறுமுனைவரைக்கும் சுற்றியோடுகிறது; அதின் வெப்பத்திற்கு மறைவானது ஒன்றுமில்லை. யெகோவாவுடைய வேதம் குறைவற்றதும், ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதுமாக இருக்கிறது; யெகோவாவுடைய சாட்சி முழுமையானதும், பேதையை ஞானியாக்குகிறதுமாக இருக்கிறது. யெகோவாவுடைய நியாயங்கள் செம்மையும், இருதயத்தைச் சந்தோஷப்படுத்துகிறவைகளுமாக இருக்கிறது; யெகோவாவுடைய கற்பனை தூய்மையும், கண்களைத் தெளிவிக்கிறதுமாக இருக்கிறது. யெகோவாவுக்குப் பயப்படுகிற பயம் சுத்தமும், என்றைக்கும் நிலைக்கிறதுமாக இருக்கிறது; யெகோவாவுடைய நியாயங்கள் உண்மையும், அவைகள் அனைத்தும் நீதியுமாக இருக்கின்றன.

சங் 19:1-9 க்கான வசனப் படங்கள்

சங் 19:1-9 - வானங்கள் தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துகின்றன,
ஆகாய விரிவு அவருடைய கைகளின் செயல்களை அறிவிக்கிறது.
பகலுக்குப் பகல் வார்த்தைகளைப் பொழிகிறது,
இரவுக்கு இரவு அறிவைத் தெரிவிக்கிறது.
அவைகளுக்குப் பேச்சுமில்லை, வார்த்தையுமில்லை,
அவைகளின் சத்தம் கேட்கப்படுவதுமில்லை.
ஆகிலும் அவைகளின் சத்தம் பூமியெங்கும்,
அவைகளின் வசனங்கள் உலகின் கடைசிவரைக்கும் செல்லுகின்றன;
அவைகளில் சூரியனுக்கு ஒரு கூடாரத்தை உண்டாக்கினார்.
அது தன்னுடைய மணவறையிலிருந்து புறப்படுகிற மணவாளனைப்போல் இருக்கிறது,
பெலசாலியைப்போல் தன்னுடைய பாதையில் ஓட மகிழ்ச்சியாக இருக்கிறது.
அது வானங்களின் ஒரு முனையிலிருந்து புறப்பட்டு,
அவைகளின் மறுமுனைவரைக்கும் சுற்றியோடுகிறது;
அதின் வெப்பத்திற்கு மறைவானது ஒன்றுமில்லை.
யெகோவாவுடைய வேதம் குறைவற்றதும்,
ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதுமாக இருக்கிறது;
யெகோவாவுடைய சாட்சி முழுமையானதும்,
பேதையை ஞானியாக்குகிறதுமாக இருக்கிறது.
யெகோவாவுடைய நியாயங்கள் செம்மையும்,
இருதயத்தைச் சந்தோஷப்படுத்துகிறவைகளுமாக இருக்கிறது;
யெகோவாவுடைய கற்பனை தூய்மையும், கண்களைத் தெளிவிக்கிறதுமாக இருக்கிறது.
யெகோவாவுக்குப் பயப்படுகிற பயம் சுத்தமும்,
என்றைக்கும் நிலைக்கிறதுமாக இருக்கிறது;
யெகோவாவுடைய நியாயங்கள் உண்மையும்,
அவைகள் அனைத்தும் நீதியுமாக இருக்கின்றன.சங் 19:1-9 - வானங்கள் தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துகின்றன,

அவைகள் அனைத்தும் நீதியுமாக இருக்கின்றன.

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த சங் 19:1-9

சங்கீதங்களில் நம்பிக்கையைக் கண்டறிதல் சங் 19:1-9 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

சங்கீதங்களில் நம்பிக்கையைக் கண்டறிதல்

5 நாட்களில்

நமது அனுதின மன்னாவிலிருந்து பிரத்தியேகமாக தெரிவுசெய்யப்பட்ட இந்த 5 வாசிப்புகளிலிருந்து சங்கீதங்களின் நேர்மையான, மூல அதாவது மாற்றப்படாத, மற்றும் இதயபூர்வமான அழுகையின் பயணம் இது. தேவனுடனான உங்கள் சொந்த உரையாடலை ஆழமாக்கவும், அவர்பேரில் தங்கள் விசுவாசத்தை வைப்பவர்களுக்கு அவர் தருகின்ற நம்பிக்கையைக் கண்டுகொள்ளவும், திரும்பவும் திரும்பவும் தெளிவாகச் சித்தரிக்கப்பட்டுள்ள இயேசுவின் அன்பு, மீட்பு மற்றும் முன் ஏற்பாடுகளையும் கண்டுகொள்ளவும் இந்த சங்கீதக்காரர்களின் வார்த்தைகளைப் யன்படுத்திகொள்ளுங்கள். தமது ஒவ்வொரு வாக்குத்தத்தத்தையும், நமது ஒவ்வொரு தேவையையும் நிறைவேற்றுகின்ற இரட்சகரின் நிமித்தம், பாதுகாப்பும், மனநிறைவும் மற்றும் மகிழ்ச்சியும் நிறைந்த வாழ்வை வாழுவதற்கு இந்த சங்கீதக்காரர்கள் உங்களுக்கு ஊக்கமளிக்கட்டும்.