யெகோவாவை துதியுங்கள்; அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது. தேவாதி தேவனைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது. கர்த்தாதி யெகோவாவை துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது. ஒருவராக பெரிய அதிசயங்களைச் செய்கிறவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது. வானங்களை ஞானமாக உண்டாக்கினவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது. தண்ணீர்களுக்கு மேலே பூமியைப் பரப்பினவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது. பெரிய சுடர்களை உண்டாக்கினவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது; பகலில் ஆளச் சூரியனைப் படைத்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது. இரவில் ஆளச் சந்திரனையும் நட்சத்திரங்களையும் படைத்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது; எகிப்தியர்களுடைய தலைப்பிள்ளைகளை அழித்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது. அவர்கள் நடுவிலிருந்து இஸ்ரவேலைப் புறப்படச்செய்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது. வலிமையான கையினாலும் தோளின் பலத்தினாலும் அதைச் செய்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
வாசிக்கவும் சங் 136
கேளுங்கள் சங் 136
பகிர்
அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக: சங் 136:1-12
வசனங்களைச் சேமிக்க, ஆஃப்லைனில் படிக்க, கற்பித்தல் கிளிப்களைப் பார்க்க மற்றும் பல!
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்