மத் 6:16-18

மத் 6:16-18 IRVTAM

நீங்கள் உபவாசிக்கும்போது, மாயக்காரர்களைப்போல முகவாடலாக இராதேயுங்கள்; அவர்கள் உபவாசிக்கிறதை மனிதர்கள் பார்க்கும்படிக்கு, தங்களுடைய முகங்களை வாடச்செய்கிறார்கள்; அவர்கள் தங்களுடைய பலனை அடைந்து தீர்ந்ததென்று, உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். நீயோ உபவாசிக்கும்போது, உன் உபவாசம் மனிதர்களுக்குக் காணப்படாமல், மறைவிடத்தில் இருக்கிற உன் பிதாவுக்கே காணப்படும்படியாக, உன் தலைக்கு எண்ணெய் பூசி, உன் முகத்தைக் கழுவு. அப்பொழுது, மறைவிடத்தில் பார்க்கிற உன் பிதா உனக்கு வெளியரங்கமாகப் பலனளிப்பார்.

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த மத் 6:16-18

வருட இறுதியில் ஒரு மறு தொடக்கம் - உபவாச ஜெபம் மத் 6:16-18 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

வருட இறுதியில் ஒரு மறு தொடக்கம் - உபவாச ஜெபம்

6 நாட்களில்

ஜெபம் மற்றும் உபவாசம் என்பது ஜெபத்தில் கவனம் செலுத்துவதற்கும், தேவனுடனான ஒருவரின் தொடர்பை ஆழப்படுத்துவதற்கும் தானாக முன்வந்து உணவைத் தவிர்ப்பதை வெளிப்படுத்துகிறது. அவை தனித்தனியாகவும் நிகழலாம், அவற்றின் கலவையானது செயல்திறனை அதிகரிக்கிறது. ஜெபத்திற்கும் உபவாசத்திற்கும் நேரம் ஒதுக்குவது என்பது தனிப்பட்ட ஆசைகளுக்காக தேவனை தேடுவதல்ல, மனத்தாழ்மையுடன் தேவ பலத்திற்காக ஞானத்திற்காக தன்னை மையப்படுத்தி அவரைச் சார்ந்திருப்பது மத்த எல்லாவற்றையும் தவிர்த்து தேவனை முக்கியப்படுத்தி ஈடுபடும் பொதுச் செயல். ஆன்மீக வளர்ச்சியையும் தேவ நம்பிக்கையும் ஆழப்படுத்திக் கொள்ள உபவாச ஜெபம் உதவி செய்கிறது.