ஏசா 29:1-5
ஏசா 29:1-5 IRVTAM
தாவீது தங்கியிருந்த நகரமாகிய அரியேலே, அரியேலே, ஐயோ, வருடாவருடம் பண்டிகைகளை அனுசரித்துவந்தாலும், அரியேலுக்கு இடுக்கம் உண்டாக்குவேன்; அப்பொழுது துக்கமும் சலிப்பும் உண்டாகும்; அது எனக்கு அரியேலாகத்தான் இருக்கும். உன்னைச் சூழப் படைகளை நிறுத்தி, உன்னைத் கோபுரங்களால் முற்றுகையிட்டு, உனக்கு விரோதமாகக் கோட்டை மதில்களை எடுப்பிப்பேன். அப்பொழுது நீ தாழ்த்தப்பட்டுத் தரையிலிருந்து பேசுவாய்; உன் பேச்சுப் பணிந்ததாக மண்ணிலிருந்து புறப்பட்டு, உன் சத்தம் குறிசொல்கிறவனுடைய சத்தத்தைப்போல் தரையிலிருந்து முணுமுணுத்து, உன் வாக்கு மண்ணிலிருந்து கசுகுசென்று உரைக்கும். உன்மேல் வருகிற அந்நியரின் கூட்டம் பொடித்தூள் அளவாகவும், பலவந்தரின் கூட்டம் பறக்கும் பதர்களைப்போலவும் இருக்கும்; அது திடீரென்று உடனே சம்பவிக்கும்.

