பிரச 3:1-11

பிரச 3:1-11 IRVTAM

ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு காலம் உண்டு; வானத்தின் கீழ் இருக்கிற ஒவ்வொரு காரியத்திற்கும் ஒவ்வொரு நேரம் உண்டு. பிறக்க ஒரு காலம் உண்டு, இறக்க ஒரு காலம் உண்டு; நட ஒரு காலம் உண்டு, நட்டதைப் பிடுங்க ஒரு காலம் உண்டு; கொல்ல ஒரு காலம் உண்டு, குணமாக்க ஒரு காலம் உண்டு; இடிக்க ஒரு காலம் உண்டு, கட்ட ஒரு காலம் உண்டு; அழ ஒரு காலம் உண்டு, சிரிக்க ஒரு காலம் உண்டு; புலம்ப ஒரு காலம் உண்டு, நடனமாட ஒரு காலம் உண்டு; கற்களை எறிந்துவிட ஒரு காலம் உண்டு, கற்களைச் சேர்க்க ஒரு காலம் உண்டு; தழுவ ஒரு காலம் உண்டு, தழுவாமல் இருக்க ஒரு காலம் உண்டு; தேட ஒரு காலம் உண்டு, இழக்க ஒரு காலம் உண்டு; காப்பாற்ற ஒரு காலம் உண்டு, எறிந்துவிட ஒரு காலம் உண்டு; கிழிக்க ஒரு காலம் உண்டு, தைக்க ஒரு காலம் உண்டு; மவுனமாக இருக்க ஒரு காலம் உண்டு, பேச ஒரு காலம் உண்டு; நேசிக்க ஒரு காலம் உண்டு, பகைக்க ஒரு காலம் உண்டு; யுத்தம்செய்ய ஒரு காலம் உண்டு, சமாதானப்படுத்த ஒரு காலம் உண்டு. வருத்தப்பட்டு பிரயாசப்படுகிறவனுக்கு அதினால் பலன் என்ன? மனிதர்கள் பாடுபடும்படி தேவன் அவர்களுக்கு நியமித்த தொல்லையைக் கண்டேன். அவர் அனைத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாகச் செய்திருக்கிறார்; உலகத்தையும் அவர்களுடைய உள்ளத்திலே வைத்திருக்கிறார்; ஆதலால் தேவன் ஆரம்பம்முதல் முடிவுவரை செய்துவரும் செயல்களை மனிதன் கண்டுபிடிக்கமாட்டான்.

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த பிரச 3:1-11

மனஅழுத்தம் பிரச 3:1-11 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

மனஅழுத்தம்

9 நாட்களில்

வாழ்க்கை என்பது ஒவ்வொரு நபரும் கிட்டத்தட்ட சகிப்புத்தன்மையுடனும் விடாமுயற்சியுடனும் போராடி மேற்கொள்ளும் ஒரு பந்தயமாகும். சில சமயங்களில், குடும்பம், திருமணம், வேலை, போன்றவற்றிற்கு நாம் ஆற்ற வேண்டிய சகலவித கடமைகளாலும் நாம் நெருக்கப்பட்டு, மிகுந்த மன அழுத்தத்தில் இருக்கிறோம். நம்மையும் அறியாமல், போட்டியிட்டு வெற்றி பெற செயல்பட வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்படுகிறோம், அதனால் ஆண்டவர் நமக்குக் கொடுத்திருக்கும் சமாதானத்தையும் சந்தோஷத்தையும் நாம் இழக்க நேரிடலாம். இந்தத் திட்டத்தில், இப்படிப்பட்ட நெருக்கடிகளை மேற்கொண்டு, ஆண்டவர் நமக்குக் கொடுக்கும் சமாதானம் மற்றும் சந்தோஷத்தால் நிரப்பப்படுவது எப்படி என்பதை நாம் காண்போம்.