2 சாமு 15:23-26
2 சாமு 15:23-26 IRVTAM
அனைத்து மக்களும் நடந்துபோகிறபோது, தேசத்தார்கள் எல்லோரும் உரத்த சத்தமிட்டு அழுதார்கள்; ராஜா கீதரோன் ஆற்றைக் கடந்தான்; மக்கள் எல்லோரும் வனாந்திரத்திற்குப் போகிற வழியே நடந்துபோனார்கள். சாதோக்கும் தேவனுடைய உடன்படிக்கைப் பெட்டியை அவனோடு இருந்து சுமக்கிற எல்லா லேவியர்களும் வந்து, தேவனுடைய பெட்டியை அங்கே வைத்தார்கள்; மக்கள் எல்லோரும் நகரத்திலிருந்து கடந்துபோகும்வரை, அபியத்தார் அங்கேயே இருந்தான். ராஜா சாதோக்கை நோக்கி: தேவனுடைய பெட்டியை நகரத்திற்குத் திரும்பக் கொண்டுபோ; யெகோவாவுடைய கண்களில் எனக்குக் கிருபை கிடைத்தால், நான் அதையும் அவர் தங்கும் இடத்தையும் பார்ப்பதற்கு, என்னைத் திரும்ப வரச்செய்வார். அவர்: உன்மேல் எனக்குப் பிரியமில்லை என்று சொன்னால், இதோ, இங்கே இருக்கிறேன்; அவர் தம்முடைய பார்வைக்கு நலமானபடி எனக்குச் செய்வாராக என்றான்.

