அநேக நாடுகளிலிருந்து மக்கள் வந்து,
“வாருங்கள், நாம் கர்த்தரின் மலைக்கு ஏறிப் போவோம்,
யாக்கோபின் இறைவனுடைய வீட்டுக்குப் போவோம்.
நாம் அவரது பாதைகளில் நடக்கும்படியாக,
அவர் தமது வழிகளை நமக்குக் கற்பிப்பார்” என்பார்கள்.
ஏனெனில் சீயோனிலிருந்து சட்டமும்,
எருசலேமிலிருந்து கர்த்தருடைய வார்த்தையும் புறப்படும்.