வரி செலுத்துவதற்காக உபயோகிக்கும் நாணயத்தை எனக்குக் காட்டுங்கள்” என்றார். அவர்கள் ஒரு தினாரி பணத்தை அவரிடம் கொண்டுவந்தார்கள். அவர் அவர்களிடம் அந்த நாணயத்தைக் காட்டி, “இதில் உள்ள உருவம் யாருடையது? இதில் பொறிக்கப்பட்டிருக்கும் எழுத்துக்கள் யாருடையவை?” என்று கேட்டார்.
அதற்கு அவர்கள், “ரோம பேரரசருடையது” என்றார்கள்.
அப்போது அவர் அவர்களிடம், “பேரரசருடையதை பேரரசருக்கும், இறைவனுடையதை இறைவனுக்கும் கொடுங்கள்” என்றார்.