இயேசு அதற்குப் பதிலளித்து, “நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கின்றேன், நீங்கள் சந்தேகப்படாமல் விசுவாசித்தால், இந்த அத்திமரத்துக்குச் செய்யப்பட்டதைப் போன்று உங்களாலும் செய்ய முடியும். அதுமட்டுமன்றி, நீங்கள் இந்த மலையைப் பார்த்து, ‘இங்கிருந்து பெயர்ந்து போய் கடலிலே விழு’ என்று சொன்னால், அதுவும் அவ்வாறே நடக்கும்.